யுத்த இரகசியங்கள், அல் ஹூசெய்னிடம் வழங்கப்படாது - ஜனாதிபதி மைத்திரி
யுத்த இரகசியங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் உள்ளிட்ட படையினரின் யுத்த இரகசியங்கள் தொடர்பிலான எந்தவொரு தகவல்களையும் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னிடம் வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த இரகசியங்களை அம்பலப்படுத்துமாறு மனித உரிமைப்பேரவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆழ ஊடுறுவித் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய யுத்த இரகசியங்கள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த தகவல்களை வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாட்டின் யுத்த இரகசியங்கள் பற்றிய விபரங்களை மனித உரிமை ஆணையாளர் கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவி;க்கப்படுகிறது.
Post a Comment