'மகிந்தோதய' எப்படி வந்தது தெரியுமா..? அம்பலப்படுத்துகிறார் ராஜித்த
முன்னைய அரசாங்கத்தின் கல்வியமைச்சால் மகிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூட திட்டம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கியுள்ளார்.
களுத்துறையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் கல்வியமைச்சராக இருந்த பந்துல குணவர்தன, பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்களை ஏற்படுத்தும் யோசனை ஒன்றை முன்வைத்தார்.
எனினும் இதற்கு எங்கு நிதி இருக்கின்றது என்று அப்போது அரசாங்கத்தில் இருந்த தலைவர்கள் நிராகரித்தனர்.
நான் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். திட்டத்திற்கு ஆதரவு பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொண்ட பந்துல குணவர்தன அந்த திட்டத்திற்கு மகிந்தோதய ஆய்வு கூட திட்டம் என பெயரிட்டு அதனை அமைச்சரவையில் தாக்கல் செய்தார்.
மகிந்தோதய என்ற பெயர் காரணமாக அமைச்சரவையில் இருப்பவர்கள் அனைவரும் அதற்கு அனுமதி வழங்கினர்.
நானும் பந்துல குணவர்தனவும் சந்தித்து கொள்ளும் போது இது பற்றி பேசிக்கொள்வோம் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment