"அனைத்து குற்றங்களும், இஸ்லாமியம் என்ற பெயரால் செய்யப்படுகிறது"
அனைத்து குற்றங்களும் இஸ்லாமியம் என்ற பெயரால் செய்யப்படுகிறது. இஸ்லாமியம் என்ற போர்வையில், மாறு வேடமிட்ட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவள் நான் என்று ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் பாலியல் அடிமையாக சிக்கி உயிர் பிழைத்த யாழிடி இனத்தை சேர்ந்த 21 வயது பெண் நாதியா முராத் இங்கிலாந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகள் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களில் நானும் ஒருவர். ஈராக்கில் சிஞ்ஜார் டவுனில் என்னுடைய வீட்டில் இருந்து பயங்கரவாதிகள் என்னை சிறைபிடித்தனர், பாலியல் அடிமையாக விற்பனை செய்தனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்னுடைய கிராமத்திற்குள் நுழைந்ததும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்களை கொலை செய்தனர்.
மறுநாள் ஒரு வயதான பெண்ணை கொலை செய்தனர். பின்னர் என்னையும், அங்கிருந்த பிற இளம்பெண்களையும் கடத்தி மொசூலுக்கு கொண்டு சென்றனர். மொசூல் நகருக்கு சென்றபோது ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் அடிமையாக விற்கப்பட்டதை பார்த்தேன். பயங்கரவாதிகள் என்னை அழைத்து செல்ல விரும்பினர். அவர்களைவிட கொடூரமானவர்களை நான் பார்த்ததே கிடையாது.
பயங்கரவாதிகள் என்னையும், பாலியல் அடிமையாக சிக்கிய பிற பெண்களையும் பிரார்த்தனை செய்யுமாறு வலியுறுத்தினர் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தனர். விலங்குகளுக்கு உள்ள மதிப்பு கூட எங்களுக்கு கிடையாது. அவர்கள் குழுவாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
என்னை வாங்கியவரிடம் இருந்து நான் தப்பி ஓடி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இது போல் அவர்களிடம் இருந்து தப்பி உயிர் பிழைத்த பெண்கள் கூறும் தகவல் அனைவரது கண்களிலும் கண்ணீரை வரச்செய்யும் விதமாக உள்ளது.
ithu oru kaddanam selutha padda vilamparam
ReplyDeleteஇஸ்லாத்தை இழிவுக்குள்ளாக்க நினைத்து அப்பாவி பெண்களின் கற்பையும், கண்ணியத்தையும் அகோரப் பற்கள் கொண்டு சிதைக்கும் மனிதத்தின் எதிரி இஸ்ரேலும் அதன் கூலிப்படைகளும் சின்னாபின்னமாகும் காலம் வெகு தூரத்தில் இருப்பதாக தெரியவில்லை! காரணம், இவ்வாறான கொலைவெறியர்களின், அரக்கர்களின் உச்சகட்ட அக்கிரமங்களே அவர்களின் அந்திமத்தின் ஆரம்பமாகும்!
ReplyDeleteஅல்லாஹ்வை பிரார்த்திப்போம்!