"சிங்கத்தின் உடலில் ஓடும், இரத்தம் போல இருக்கவேண்டும்" - ரோஹித ராஜபக்ச
சிங்க லே இயக்கம், பொது பல சேனாவை போன்று செயற்படாது ஸ்ரீலங்காவின் இயக்கமாக செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமது முகநூலில் இந்த கருத்தை அவர் பதிவுசெய்துள்ளார்.
நுகேகொடையில் முஸ்லிம் வீடுகளின் வாயிற்கதவுகளில் சிங்க லே என்ற சொல் நேற்று முன்தினம் எழுதப்பட்டிருந்தது.
இது இனவாதத்தை தூண்டும் என்று செயல் என்று பலரும் விமர்சனம் செய்த நிலையிலேயே ரோஹித ராஜபக்ச தமது கருத்தை பதிவுசெய்துள்ளார்.
சிங்க லே இயக்கத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிடாத அவர், சிங்க லே என்ற சொல், சிங்களம் பேசுபவர்கள் அல்லது பௌத்தர்கள் என்ற அர்த்தத்தை கொடுத்துவிடக்கூடாது.
அது, எவருக்கும் தலை வணங்காத, எந்த நாட்டுக்கும் கீழ்படியாத, சிங்கத்தின் உடலில் ஓடும் இரத்தம் போல இருக்கவேண்டும்.
அத்துடன், தைரியமான சிங்கத்தை போன்று நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்றும் ரோஹித தெரிவித்துள்ளார்.
குடும்ம ஆட்சி கவிழ்ந்தகாலம் தொட்டு உங்க காட்டில் மழைபெய்யெ பலவழிகலை பிந்தொடர்கின்ரீர்கள் என்பதே உன்மை
ReplyDeleteஇப்போது புரிந்துவிட்டது எங்கிருந்து இனவெறி ஆரம்பம் என்பது
ReplyDeleteநீலப்படைக்கு அண்ணனும் சிங்கே படைக்கு தம்பி தலைமைகள்
ReplyDeleteமிர்ஹ்த்தின் இரத்தம் 5 அரிவு உடய நடத்தை கெட்ட இரகமட்ட மிர்ஹம் இவர்கள் கைது செய்ய படனும்
ReplyDeleteThat is why ur brother hunted the waseem thajudeen
ReplyDeleteAnimals talk about animal welfare .
ReplyDelete