ஞானசாரரை விடுவிக்க தீவிரமான நடவடிக்கைக்கு, தயாராகுமாறு சிஹல ராயவ அழைப்பு
ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படாமை தொடர்பில், தீவிரமான நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகுமாறு சிஹல ராயவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சிஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஹோமாகம நீதிமன்ற வளவில் வெளியிட்ட கருத்துக்காக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று அவரை பிணையில் எடுக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து கருத்துரைத்துள்ள அக்மீமன தயாரட்ன தேரர் நீதிமன்றத்துக்கு கல்லெறிந்த அமைச்சா ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காவுக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும் போரில் வெற்றியை பெற்றுக்கொடுத்த படைவீரர்களுக்காக பேசிய ஞானசார தேரருக்க பிணை வழங்கப்படாமை வேதனைக்குரியது என்று தேரர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Post a Comment