பலஸ்தீன சகோதரிகளின் உயிர் தியாங்கள், இஸ்ரேலுக்கு குழப்பம்
இஸ்ரேலியர் மீது கடந்த சில மாதங்களாக தொடரும் கத்திக்குத்து தாக்குதல்களில் வழமைக்கு மாறாக அதிக பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு 20 இளம் பெண்கள் இஸ்ரேலியர் மீது தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேல் இராணுவ தரவுகள் குறிப்பிடுகின்றன.
இதில் தனது மூன்று மகன்கள் இருந்தபோதும் ஒரே மகளான மர்அம் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டது குறித்து ரமீஸ் ஹஸனாஹ் என்ற தந்தை பெரும் கவலையுடன் உள்ளார். தனது தந்தையின் எச்சரிக்கைகளையும் மீறி 20 வயது மர்அம் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி இஸ்ரேல் சோதனைச் சாவடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்று இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பலஸ்தீனர்களின் இந்த புதிய தாக்குதல் உத்தி பலஸ்தீன குடும்பங்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக இஸ்ரேல் படையினர் பலஸ்தீன இளைஞர்களின் நடமாட்டத்தையே கட்டுப்படுத்தி வந்தனர். எனினும் தற்போது வழமைக்கு மாறாக பெண்களும் தாக்குதல்களில் ஈடுபடுவதால் படையினர் செய்வதறியாது உள்ளனர். இவ்வாறு தாக்குதல் நடத்தும் பெரும்பாலான பெண்கள் அதிகம் கற்ற சிந்தனைப்போக்குடையவர்களாக உள்ளனர்.
இதில் மர்அம் என்பவர் அந் நஜாஹ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பிரிவு மாணவி என்பதோடு, அதிக பக்திகொண்ட முஸ்லிமாகவும், இளம் பலஸ்தீனர்கள் கொல்லப்படும் காட்சிகளைப் பார்த்து விரக்தி அடைந்தவராகவும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
முழு குர்ஆனையும் மனனமிட்டிருக்கும் அவர் தனது சகோதரர்களைப் போலன்றி இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீர்மானத்துடன் இருந்துள்ளார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் இஸ்ரேலிய வீரர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்று ஆறு மாதம் சிறை அனுபவித்திருந்ததாகவும் அவரது தந்தை குறிப்பிடுகிறார்.
“ஆக்கிரமிப்பின் கீழ் முகம்கொடுக்கும் ஒடுக்குமுறைகளை பெண்கள் மிகவும் உணர்வுபூர்வமாக பார்க்கிறார்கள். இந்த விடயங்களால் அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றனர்” என்று நப்லூஸ் நகரில் இருக்கும் தனது விட்டில் வைத்து ஹஸனாஹ் குறிப்பிட்டார். மரணித்த தனது மகளின் மிகப்பெரிய பதாகை ஒன்றை கையில் வைத்தபடியே அவர் ஏ.பி. செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்தார். “தன்னால் இளைஞர்களுக்கு முன்மாதிரியை வழங்க முடியும் என்று அவள் நினைத்தாள். ஒருமுறை அவள் என்னைப் பார்த்து: ‘(பெண் ஒருவர்) கொல்லப்பட்டிருப்பதை பார்க்கும்போது தேநீர் கடைகளில் இருக்கும் எமது ஆண்கள் செயற்பட ஆரம்பிப்பார்கள்’ என்று குறிப்பிட்டாள்” என்றும் அந்த தந்தை தெரிவித்தார்.
கடந்த செப்டெம்பர் நடுப்பகுதியில் வன்முறைகள் ஆரம்பித்தது தொடக்கம் பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் 21 இஸ்ரேலியர், ஒரு அமெரிக்க யூதர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான தாக்குதல்கள் தனது பதின்ம வயது அல்லது 20 வயதுகளில் இருக்கும் இளைஞர்களாலேயே நடத்தப்பட்டுள்ளது. கத்திகள், கத்தரிக்கோல் போன்ற ஆயுதங்களாலேயே தாக்குகின்றனர்.
கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் இதுவரை குறைந்தது 140 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் பெண்களாவர். கொல்லப்பட்ட 91 பேர் தாக்குதல்தாரிகள் என்று இஸ்ரேல் அடையாளப்படுத்தியுள்ளது. எஞ்சியவர்கள் இஸ்ரேல் துருப்பினருடனான மோதலில் கொல்லப்பட்டவர்களாவர்.
பல தசாப்தங்களாக நீடிக்கும் பலஸ்தீனர்கள் மீதான ஆக்கிரமிப்பு, அமைதி முயற்சிகளின் தோல்வி மற்றும் அதிகரிக்கும் இஸ்ரேலிய குடியேற்றங்கள் போன்றவையே இந்த வன்முறைகளுக்கு காரணம் என கருதப்படுகிறது.
கடந்த கால பலஸ்தீன எழுச்சி போராட்டங்களில் பெண்கள் வீடுகளில் தங்கி இருந்து ஆண்கள் போராட்டத்தில் ஈடுபடுவதே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சமூகதள வளர்ச்சி பெண்களை வன்முறை நடக்கு இடங்களுக்கு இட்டுச் செல்வதாக பலஸ்தீன ஆய்வாளர்கள் விபரித்துள்ளனர்.
இதில் 16 மற்றும் 14 வயதுடைய பலஸ்தீன சிறுமிகள் இஸ்ரேலியர் என நினைத்து வயது முதிர்ந்த பலஸ்தீனர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதன்போது இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது நுர்ஹான் என்ற சிறுமி கொல்லப்பட்டார். தனது மகள் இந்த தாக்குதலை நடத்தியதாக கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அவரது தந்தை இப்ராஹிம் அவ்வாத் தெரிவிக்கிறார்.
“அவள் இந்த தாக்குதல் நடத்த செல்வது தெரிந்திருந்தால் வீட்டில் கட்டி வைத்திருப்பேன். ஆனால் அவளது நடத்தைகள் எல்லாம் சாதாரணமாகவே இருந்தன. எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை” என்கிறார். கடந்த நவம்பர் 22 ஆம் திகதி அஷ்ரகாத் என்ற 16 வயது சிறுமி மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவ முகாம் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்றபோது இஸ்ரேலிய குடியேறி ஒருவர் தனது காரால் மோதி பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எனது மகன் இதனைச் செய்திருந்தால் நான் ஆறுதல் அடைந்திருப்பேன் என்று அவரது தந்தை தாஹா கதனானி குறிப்பிடுகிறார். “எனது மனப்பான்மையில் சொல்வதானால் இவ்வாறான செயலை ஆண்களே செய்ய வேண்டும் என்று கருதுகிறேன். ஆனால் பெண்கள் இதனைச் செய்யும்போது அது கடுமையான செய்தியை சொல்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
Alhamdulillah. It is a great move.ALLAH will help them
ReplyDeleteஜிஹாதிய மனநிலை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இதனை விட வேறு என்ன உதாரணம் தேவை? இதைத்தானே சமாதானத்தின் மதம் என்று சொல்லிக்கொள்ளும் மதம் போதிக்கின்றது.
ReplyDeleteDude, Mr.Nilawan, ina weriyargal moolam ongda weedu, ongda Nilam(land), ongda kudumbam, ongda shondangal, ongda warumanam(tholil), ongda manaiwi, pulla, kutti ellathayum aniyayamaga ilandhu thavikkira ORE ORU NIMIDAM indha ulagathula warum endu irundhal... Andha payangara kodumayellam seidha manitha miruhangal ellorayum unmaiyennandu ariyadha manithapimanamatra miruga kunam udaiyawargal adharikka tha pogirargal. (For an example- just like you) I'm sorry to say this Mr.Nilawan..
ReplyDeleteMay almighty Allah (the creator of the whole humanity and the whole world) protect you and give you interest to read and understand the Holy Quran.
Mr Nilawan
ReplyDeletePlease study completely islam first before blindly blaming...
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
ReplyDeleteபுத்திசாலி புரிந்து கொள்வான்.
Mr.Nilavan
ReplyDeleteதனக்கு வந்தால் தெரியும்
Ramees, அந்த தந்தையின் வார்த்தைகளைப் பார்த்தல் எனது கருத்தை புரிந்து கொள்ளலாம். நான் இஸ்ரவேலை சாரிகான்பவன் அல்ல. அதே நேரம், இஸ்ரவேல் பிழையாக இருந்தாலும், வேறு கற்பனைக் கோசங்களால் பாலஸ்தீன சிறுவர் சிறுமிகளை உசுப்பேற்றி பலிக்கடா ஆக்கக் கூடாது.
ReplyDeleteபக்கத்தில் தமிழ்நாடு என்று ஆறு கோடி மக்கள் இருந்துகொண்டு, இலங்கையில் உள்ள தமிழர்களை உசுப்பேற்றி, இலங்கையின் ஆதி குடிகள் தம்நிலர்களே, சிங்களவர்கள் ஒரியாவில் இறந்து வந்த வந்தேறு குடிகளே என்றெல்லாம் உசுப்பேற்றி, புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தை வளர்த்தெடுத்து, கடைசியில் இலங்கையின் மொத்த தமிழினத்தையும் சொல்லனா துன்பத்திற்கும், இழப்பிற்கும் உள்ளாக்கினார்கள்.
உசுப்பெற்றுதல் பயனளிக்காது. யதார்த்தமாக அணுக வேண்டும்.
அருகில் உள்ள எந்த அரபு, முஸ்லிம் நாடும் தலையிடுவதில்லை, தமது பிராந்திய அரசியல் நலன்களுக்காக பாலஸ்தீன அப்பாவிகளை உசுப்பேற்றி, மத உணர்வுகளை ஊட்டி, சுவர்க்கக் கனவுகளை கூறி அவர்களை பலியாக்குகின்றனர்.
இஸ்லாமிய ஆட்சி பேசும் நவீன கலீபா தையேப் ஆர்துஆன் கூட அங்காராவில் இஸ்ரவேலிய ராஜதந்திரிகளுடன் உறவு கொண்டாடுகின்றார். வீணாக பலியாக்கப்படும் பாலஸ்தீன சின்னஞ் சிறுசுகளுக்காக கவலைப் படுகின்றேன்.
ஆடு நனையுது என்று ஓநாய் அழுததாம்!
ReplyDeleteGaza இன் பரப்பளவு 40KM x 10KM
சனத்தொகை - 1.8 பில்லியன்
90% குடிநீர் அருந்துவதற்கு உகந்ததல்ல.
2000 இல் இருந்து இன்றுவரை இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 9271 இதில் 80% பொதுமக்கள்.
சிறுவர்கள் பற்றி கவலைப்படுபவர்களுக்கு இந்த செய்தி
2006 இருந்து இறந்த குழந்தைகளின் விகிதம் 1:16 means ஒரு இஸ்ரேல குழந்தைக்கு 16 பலஸ்தீனக் குழந்தைகள்.
Israelites says the Hamas were amongst the kids, or take kids as a guard. come on dude when you cramp 1000 people in 10m's where the hell they gonna stay?
The wolrd know's the truth but we are aware that the enemies of islam pretend not to see.
anyway am against the Suicide bombings. I see it as Un-Islamic.
Quran says that we cannot kill any innocent human beings by becoming a suicide bomber most of the time the civilians die than the soldiers.
The Palestinian struggle to be considered differently than Islamic extremism. The Palestinians have all the rights to defend against Israeli occupation on their lands.The world should find a better permanent solution for the crisis.
ReplyDeleteநிலவன் நீங்கள் மகா நீதிவான், உங்கள் நியாயத்தையும் உங்கள் மதங்களின் நீதியையும் கொஞ்சம் விளக்குகிறேன் கேளுங்கள்.
ReplyDeleteஇந்தியாவில்...
மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று (ஒரு பொய்யைச்சொல்லியே) ஒரு வயது போன முஸ்லிம் நபரைக்கொல்வது இந்து மதத்தின்படி நியாயம்...
மு. கருணாநிதி சொன்னதுபோல் "புராணக்கதையின் அடிப்படையில் உருவான இராமர் கதாபாத்திரத்தை வைத்து" இன்னொரு சமூகத்தின் வணக்கஸ்தலத்தை இடித்து நொறுக்கி அந்த சமூகமக்களையும் அடித்து நொறுக்கியது இந்து மதத்தின்படி நியாயம்..
இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் கடைசி நேரத்திலாவது ஓரளவு மனட்சாட்சியுடன் நடந்துகொண்டு காஸ்மீர் மக்களுக்கும் சுதந்திரமான ஆட்சி, அதிகாரம் வேண்டும் என்று தீர்ப்புக்கூறியபோதும், அதை உதாசீனம் செய்து அன்றிலிருந்து இன்றுவரை அந்த மக்களின் ஆட்சி, அதிகாரத்தை வழங்குவதைவிட, வாழும் உரிமையைக்கூட இல்லாமலாக்கிக்கொண்டு ரஷ்யாவின் "இரும்புத்திரையை" குத்தகைக்கு எடுத்து காஸ்மீரில் போட்டு மூடிக்கொண்டு இந்துமதம் செய்யும் அக்கிரமங்கள், படுகொலைகள் எல்லாம் நியாயம்..
அவ்வாறே இலங்கையில்...
தங்களைவிட வசதியாக இருக்கின்றார்கள் என்பதற்காக முஸ்லிம்களிடம் இருந்து உள்ளவன், இல்லாதவன் என்று பார்க்காமல் ( புலிகள் என்ற இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ) கொள்ளையடித்தது நியாயம்...
(வடக்கில்) தங்கள் பிரதேசத்தில் இருக்கின்றார்கள் என்பதற்காக (புலிகளும் அதன் அனுதாபிகளுமான இந்துக்களும் கிருஸ்தவர்களும்) முஸ்லிம்களை வெற்றுக்கைகளோடு 24 மணிநேரக்காலக்கெடுவில் தங்கள் பரம்பரையான வாழிடத்தை விட்டு விரட்டியடித்து, அதன்பின் இருந்ததை கொள்ளையடித்து, பின் பொய்யான ஆதாரங்கள் உருவாக்கி, தாம் சார்ந்த மக்களை குடியமர்த்தியது நியாயம்..
மேலும், காத்தான்குடியிலும், ஏறாவூரிலும், அலிஞ்சிப்பொத்தானையிலும், மற்றும் ஏனைய கிழக்குப்பகுதிகளிலும் அப்பாவி முஸ்லிம்களை குட்டி, குழந்தைகள் என்றும், பெண்கள் என்றும் பார்க்காமல் (கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக்கீறிக்கிழித்து அதிலிருந்த கருக்களைக்கூட) புலிகளும் அதன் அனுதாபிகளுமான இந்துக்களும் கிருஸ்தவர்களும் சிதைத்தது நியாயம்..!
அவ்வாறே, தங்களுக்கு எல்லாவிதமான ஆட்சி, அதிகாரங்களும், உரிமைகளும் (உத்தியோகப்பற்றற்ற முறையிலாவது) இருந்தும் போதாது என்று பெரும்பான்மை சமூகத்தோடும், நாட்டின் அரசோடும் யுத்தம் செய்ததும், அழிவுகளை உண்டாக்கியதும் மதத்தின் பெயரால் நியாயம்..!
ஆனால், உலகிலோ, இலங்கையிலோ தங்களுக்கெதிராக அடக்குமுறைகளும், அநியாயங்களும், உரிமை மறுப்புகளும், அபகரிப்புகளும், கொலைகளும் நிகழும்போது, பாதிக்கப்பட்ட தனிமனிதனோ, அல்லது அந்த சமூகமோ அவற்றிற்கெதிராக, அந்த அநியாயங்களை தடுப்பதற்காக, அல்லது பழிவாங்கும் தார்மீக உரிமை உண்டென்ற நிலையில்...,தன்னால் இயலுமான வகையில், இயலுமான வரையில் போராடும்போது அது "முஸ்லிம்" என்ற ஒரே காரணத்தால், இஸ்லாம் என்ற மார்க்கத்தை அவர்கள் பின்பற்றுபவர்கள் என்ற ஒரே காரணத்தால் உங்களுக்கு குற்றமாக, அநியாயமாக படுகின்றது.. அப்படித்தானே!
நீங்கள் உங்கள் மதங்களின் நியாயப்படி செய்யும்போது, நாங்கள் எங்கள் மார்க்கத்தின் நியாயப்படி செய்ய எங்களுக்கும் உரிமை உண்டு என்பதை மற்றும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்!