மஹிந்த ராஜபக்ஸவின் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதா..? உண்மையை அறிவிக்குமாறு பொலிஸில் முறைப்பாடு
மஹிந்த ராஜபகஸவிடம் இருப்பதாக கூறப்படும் தங்கம் குறித்து ஏ.எஸ்.பீ லியனகே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ராஜகிரியவில் இருக்கும் 70 கோடி பெறுமதியான தனக்கு சொந்தமான பீகொக் இல்லத்தின் நீச்சல் தடாகத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பல வதந்திகள் வெளிவந்துள்ளன.
எனவே, அவை தொடர்பாக விசாரித்து உண்மை நிலையினை அறிவிக்குமாறு கூறியே லியனகே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், அந்த தடாகத்தில் மணல் நிரப்பபட்டு அதன் கீழ் இவ்வாறு தங்கம் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுவதானது தன்னை மிகவும் கஸ்டப்படுத்தும் ஒரு செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் நெருக்கமான ஒரு ஜோதிடரின் ஆலோசனைக்கமையவே அந்த நீச்சல் தடாகத்தில் மணல் நிரப்பப்பட்டதெனவும் ASP லியனகே தெரிவித்துள்ளார்.
உன்மையை கன்டரியும்போது இது புதையலாகமாரிவிடும்....
ReplyDelete