Header Ads



அறிவியல் வளர்ச்சியின் மாபெரும் சாதனை, விண்வெளியில் பூத்த முதல் பூ...!

அறிவியல் வளர்ச்சியின் மாபெரும் சாதனையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்கப்பட்ட பூச்செடி ஒன்று முதல் முதலாக பூத்துள்ள பூக்களின் படங்களை விண்வெளி வீரர்கள் வெளியிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆய்வு மையத்தில் பூச்செடிகளை வளர்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் 16ம் திகதி சின்னியா என்ற பூச்செடி விதைகளை விதைத்தனர்.

சரியாக புத்தாண்டு தினத்தில் பூக்கள் மலரும் விதத்தில் வீரர்கள் அந்த செடிகளை பராமரித்து வந்துள்ளனர்.

பூச்செடிகளுக்கு சூரிய வெளி தேவை என்பதால், அதற்கு மாறாக LED விளக்குகள் மூலம் ஒளியை உற்பத்தி செய்து செடிகளை வளர்த்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் கடின முயற்சிக்கு பலனாக அழகான சின்னியா மலர்கள் முழுமையாக தற்போது பூத்துள்ளது.

இந்த பூக்களின் படங்களை “விண்வெளியில் பூத்த முதல் பூ’’ என்ற தலைப்பில் அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்கோட் கெல்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம், விண்வெளியில் பிற தாவரங்களையும் வளர்க்க முடியும் என்பது நிரூபனம் ஆகியுள்ளது.

ஆனால், இதற்கு முன்னதாகவே விண்வெளி வீரர்கள் கீரை வகை தாவரங்களை பயிருட்டு வளர்த்து அதையே உணவாகவும் உண்டு வருகின்றனர்.

இதன் கட்ட சாதனையாக, விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தக்காளி உள்ளிட்ட பழ வகை தாவரங்களையும் வளர்க்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.




2 comments:

  1. பல கடுமையான முயற்சிகளுக்கு பின்தான் வளர்க்க முடிந்ததே தவிர.. சாதாரணமாக எளிமையான முறையில் பூமியை போல் வளர்க்க முடிவதில்லையே.

    இருப்பதை விட்டு இல்லா இடம் தேடி என்ன பயன்?

    ReplyDelete
  2. இவ்வலவு ஆராட்ச்சி உலகம் அல்லாஹ்வின் படைப்பு மரமன்டைகலுக்கு படாதா

    ReplyDelete

Powered by Blogger.