மதுவகைகளை தவிர்க்கும்படி பிரான்ஸுக்கு ஈரான் தூதர்கள் கோரிக்கை
ஈரான் ஜனாதிபதி ஹாசன் ரொஹனி பிரான்ஸ்க்கு வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி ஹாசன் ரொஹனி இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்முதல் கட்டமாக இத்தாலிக்கு சென்ற அவர் இத்தாலி ஜனாதிபதி மாத்தியு ரென்ஜி மற்றும் போப் பிரான்ஸில் ஆகியரை சந்தித்து பேசினார்.
அவரது வருகையின் போது இத்தாலியில் உள்ள நிர்வாண சிற்பங்கள் அனைத்தும் துணி மூலம் மறைக்கப்பட்டது.
இரண்டு நாடுகளுக்கு இடையில் சுமார் 17 பில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில் தனது பயணத்தின் ஒரு பகுதியாக புதனன்று அவர் பிரான்ஸ் வரவுள்ளார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்காயிஸ் ஹாலண்டே மற்றும் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரை அவர் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈரானுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் தேவைப்படுவதால் பிரான்சுடம் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக ரொஹனி மற்றும் பிரான்காயிஸ் ஹாலண்டே கலந்துகொள்ளும் மதிய விருந்தில் மதுவகைகளை தவிர்க்கும்படி பிரான்ஸுக்கு ஈரான் தூதர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் தங்களது பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் மத்திய உணவுக்கு பின் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் எனவும் பிரான்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment