எனது ஆட்சியை, எவரலாறும் கவிழ்க்க முடியாது - பிரதமர் ரணில் சூளுரை
அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கை நழுவவிடமாட்டோம் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசின் ஒரு வருடப் பூர்த்தி என்ற புதிய அரசின் ஒரு வருடப் பூர்த்தி நிகழ்விலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஏனைய பிரதானக் கட்சிகளும் இணைத்து முன்னெடுக்கப்படும் நல்லாட்சி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டில் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய வீழச்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் இலங்கையின் பொருளாதாரத்தில் எந்த வீழச்சியும் ஏற்படவில்லை என்பதை நல்லாட்சியின் பெருமையாக கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
வடக்கும் கிழக்கும் ஒன்றாக இருக்கும்போதும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் ஒன்றாக இருக்கும்போதும் நகரம் கிராமம் ஒன்றாக இருக்கும்போதும் எனது ஆட்சியை எவரலாறும் கவிழ்க்க முடியாது என்றும் பிரதமர் ரணில் சூளுறை விடுத்தார்.
நாடு இன்று மிகவும் முன்னேற்றகரமான நிலையை எட்ட ஜனாதிபதி பெரும் அர்ப்பணிப்பு செய்தார் என்று குறிப்பிட்டர்

Don't say like as mahinda. Think ever about GOD
ReplyDelete