சவூதி அரேபியா தனது, குற்றத்தை மறைக்கமுடியாது - ஈரான்
சவுதி உறவை முறித்துக் கொண்டதால் குற்றத்தை மறைக்க முடியாது என்று ஈரான் கூறி உள்ளது.
சவுதி அரேபியா, தங்கள் நாட்டில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தேசதுரோக குற்றச்சாட்டு சுமத்தி சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் அண்மையில் மரண தண்டனையை நிறைவேற்றியது.
சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ள ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்ட ஈரான், ஈராக் நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரானில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குள் நூற்றுக்கணக்கானோர் புகுந்து தீ வைத்தனர். வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்தது. அதிரடிபதில் நடவடிக்கையாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் செயல்பட்டு வந்த தனது தூதரகத்தை இழுத்து மூடியது. தனது நாட்டின் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதால் ஈரானுடன் கொண்டிருந்த தூதரக உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது. பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவாகி இருக்கும் நிலையில், தூதரக உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் உறவை முறித்துக் கொண்டதால் செய்த குற்றத்தை மறைக்க முடியாது என்று ஈரான் கூறிஉள்ளது.
ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் உடனான உறவை முறித்துக் கொண்ட சவுதி அரேபியா செய்த குற்றத்தை மறைக்க முடியாது என்று ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி கூறிஉள்ளார். s
Post a Comment