சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை, கைப்பற்றும் இரகசிய முயற்சியில் மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமப் பதவியை கைப்பற்றும் இரகசிய முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் யாப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்து கட்சியின் தலைமைப் பதவியை மீளவும் கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே மஹிந்த கட்சியை விட்டு வெளியேறாமல் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாடு தழுவிய ரீதியில் உள்ள தொகுதி அமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கட்சியின் மத்திய செயற்குழுவின் அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் ஊடாக தலைமப் பதவியை பெற்றுக் கொள்வதே மஹிந்தவின் திட்டமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சியின் தலைமப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சியின் சிலர் கோரி வருவதாகவும், அவ்வாறு ஏற்றுக் கொள்வது முட்டாள்தனமான தீர்மானமாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment