Header Ads



ராஜிதவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் மருத்துவ பயிற்சி பெற்றுகொடுத்தல் தொடர்பான செயற்பாடுகளுடன் தொடர்புடைய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்கு எதிராக எதிர்வரும் வாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுளளது.

இதனை அரச மருத்துவ அதிகாரிகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் முனைவர் நவீன் த சில்வா இதனை தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.