அரசியல்வவாதிகள் எல்லோரும் நல்லவர்கள், வாக்காளர்கள்தான் பிழை விடுகிறார்கள் - அமீர் அலி
அரசியல்வவாதிகள் எல்லோரும் நல்லவர்கள். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் வாக்காளர்கள் தான் பிழை விடுகின்றார்கள் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் எழுதிய இலங்கை முஸ்லிம்களால் எதிர் கொள்ளப்படும் சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா ஓட்டமாவடி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.
அனைத்து அரசியல்வாதிகளும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசியலுக்கு வருகின்றார்கள். ஆனால் வாக்காளர்கள் அரசியல்வாதிகளை மிஞ்சியவர்களாக அவர்களை ஏமாற்றுகின்ற வேலைகளை செய்கின்றார்கள். தங்களது தேவைகள் முடிவடையவேண்டும் என்பதற்காக அரசியல்வாதியை ஆதரிப்பதாக கூறுவதும் அந்த விடயம் முடிவடைந்ததும் அவரை விமர்சிப்பவர்களாகவும் உள்ளனர். இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக தனது கருத்தினை அரசியல்வாதி வெளியிட்டால் அவர் தவறானவராக சித்தரிக்கப்படுகின்றார்.
தற்போது நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்று கூறும் கருத்திற்கு எனது உடன்பாடு கிடையாது. நல்லாட்சி என்று சொல்வது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும். இன்று நாட்டில் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அவர்களுக்கு கடந்த காலத்தில் சிறுபான்மை அரசியல்தலைவர்களால் எற்பட்ட பிரச்சினைகள் என்னவென்று தெரியும் அந்தப் பிரச்சினைகளில் இருந்து பெரும்பான்மை கட்சிகள் தப்பித்துக் கொள்வதற்கான இணக்கப்பாட்டுடன்தான் 20 ஆவது அரசியல் சட்டம் உருவாகவுள்ளது. 20ஆவது அரசியல் சட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில் தொகுதிவாரி தேர்தல் முறை வரும் அதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினை இல்லை. வட கிழக்குக்கு வெளியே உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாதிப்படைவார்கள் எனறும் தெரிவித்தார்.
சகோதரர் அமீர் அலி பிதற்றுகிறார். இவருக்கு சரியான கவுன்சிலின் செய்ய வேண்டும்.
ReplyDeleteஅரசியல் வாதிகள் எல்லாம் நல்லவர்கள் என்றால் ஏன் உங்கள் எதிர் அணியில் உள்ளவர்களை திட்டுகிறீர்கள். ஏன் இந்த ஆட்சியை நல்லாட்சி என்று உங்களால் சொல்ல முடியாது??? அப்படியானால் மைத்திரியும் ரணிலும் கெட்ட ஆட்சியா செய்கிறார்கள்? ஏன் நீங்கள் இந்த ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கிறீர்கள்? பிரதி அமைச்சர் பதவி... அபிவிருத்தி குழு தலைவர்.... இவையெல்லாம் அனுபவித்துக் கொண்டு. இதெல்லாம் கிடைப்பதற்கு வழிவகுத்த வாக்காளர்கள் ஏமாற்றுக் காரர்கள் என்று குற்றம் சாட்டுகிறீர். நீங்கள் அரசியல் வாதிகள் ஒருவகையான பிச்சை காரர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வாக்காளர் போட்ட பிச்சை தான் உங்களுக்கு கிடைத்துள்ள பதவி, பணம், அந்தஸ்து. விரால் இல்லாத ஆத்துக்கு குறட்டை அதிகாரி என்பார்கள். இது தானா? நீங்கள் பீற்றிக் கொள்ளும் அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும். கேட்பவன் கேணப் பயல் என்றால் எருமை மாடு ஏறப்பிளேன் ஒட்டுது என்பானாம். இவருக்கு வாக்களித்த வாக்காளர்களே (ஏமாற்று காரர்களே) சிந்தியுங்கள்.
hehe இவருக்கு வாக்களிதவர்களுக்கு இனிமேலாவது சூடு சொரணை வரும் என நம்புகிறோம்.
ReplyDeleteசரி நல்லது செய்ய வேண்டும் என்று வருபவர்களின் சொத்து மதிப்பு அரசியலுக்கு முன் / பின் கணக்கிட்டு பார்த்தல் பல மடங்காக அதிகரிக்கவும், மக்கள் தான் காரணமா ? அல்லது நீங்கள் கூறும் அந்த சேவை மனப்பான்மையின் உச்சம் தான் காரணமா ?
Small correction Ameer Ali. Those who are supporting and voting ACMC should be blamed.
ReplyDeleteஅவர் சொன்னது 100% உன்மை. இனியாவது அவரது கூற்றுப்படி ஏமாளி?(ஏமாற்று) பேர்வளிகளை தெரிவு செய்யாது சரியானவர்களை
ReplyDeleteதெரிவு செய்வோம்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
ReplyDeleteவஞ்சனை சொல்வாரடி - கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ!
This comment has been removed by the author.
ReplyDeleteஎங்கள அமைச்சரை ஒருவராது நல்லவன்னு சொல்லுராங்கலியேப்பா?ஏம்பா இப்படி?
ReplyDeleteமக்களிடம் வாக்கு பிச்சை கேட்கும் போது மட்டும் மக்கள் நல்லவர்கள்........போல......
ReplyDeleteஎங்களை ஏமாற்றாதீர்கள் என்று சொன்னவர் எங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் சொல்லியிருந்தாள் நல்லாயிருந்திருக்குமே...
ReplyDelete