முஸ்லிம் அரசியல்வாதிகள், களத்தில் குதிக்க வேண்டும் - அமீன்
மாடு அறுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது கவலையளிப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் முஸ்லிம் கவுன்சில், இதுவிடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் உடனடியாக களத்தில் குதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டதாவது,
மாடு அறுப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருக்கும் கருத்துக்கள் கவலைக்குரியது. குறிப்பாக முஸ்லிம்களின் மார்க்க கடமையான குர்பான விவகாரத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்.
பொருளாதார ரீதியாக முஸ்லிம் சமூகம் மாத்திரமின்ற இலங்கையர்கள் சகலருக்குமே இது பாதிப்பை ஏற்படுத்தும். மாடு வளர்ப்பில் அதிகமான சிங்கள சமூகம் ஆர்வம் காட்டிவருகிறது. இவ்வாறு மாடு வளர்ப்பது இறைச்சிகாத்தான். மாடு அறுப்பதுற்கு தடை விதிக்கப்படும்போது, அவர்களின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களும் நெருக்கடிகளை சந்திக்கலாம்.
முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும், இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க வேண்டும் என விரும:பும் ஒரு தரப்பும் இலங்கையில் உள்ளது. அவ்வாறான இனவாத, மதவாத தரப:புகளுக்கு ஜனாதிபதி மைத்திhயின் கூற்றுக்கள் வாய்ப்பாகிவிட்டது என்பதுதான் இங்கு கவனத்திற்குரிய விடயம்.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதுகுறித்து நேரடியாக விவாதிக்க வேண்டும். அவரிடம் இதுகுறுpத்து விளக்கம் கோர வேண்டும். எனவும் என்.எம். அமீன் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஒன்னும் தேவை இல்லை, இருங்க கொஞ்ச நாளைக்கு, இது நடக்கபோற இல்லை, அப்படியே நடந்தாலும் அதனால் பாதிக்கபடுவது அதிகமாக சிங்களவர்கள்தான். அதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
ReplyDeleteநீங்கள் அரசியல் வாதிகளுக்கு உரம் போடாம இருந்தால் போதும் இது முஸ்லிம்களின் பிரச்சினை இல்லை மேலும் ஒரு மாத காலம் பொறுமையாக இருந்தால் இதற்கு தானாக தீர்வு கிட்டும் இது ஒரு உனு சங்கிலி தொடர் இயற்கையோடு தொடர்பு பட்டது இதனை யாராலும் கொன்றோல் பண்ண முடியாது அவர்களே இது பிழையான போக்கு என்று கைவிட்டு விடுவார்கள்
ReplyDelete5000 மாடுகள் ஒரு நாளைக்கு அறுக்க படுஹின்றன இதனை நிறுத்தினால் ஒரு மாதத்திற்கு அப்ப்ருரம் அவர்களே உணர்வார்கள் நீங்கள் ஹஜ் கடமைகளை இதற்குள் சம்மந்த படுத்த வேண்டும் அதற்குள் தீர்வு தானாக வரும்
மாறாக இது ஒரு பொதுவான பிரசின முஸ்லிம்கள் மட்டும் என் பேச வேண்டும் அதுதான் அரசியல்
முஸ்லிம்களே இந்த தீர்மானத்தினால் எந்த பாதுப்பும் முஸ்லிம்களுக்கு ஏற்படாது மாறாக பொறுமையாக ஒரு இரு மாதங்கள் இருந்தால் போதும் நன்மை கிட்டும் இதனை எல்லோரும் உணரலாம்
அரசியல் நோக்கத்திற்கு கரி வேப்பலை ஆகி விடாதீர்கள்
சில புத்தி ஜீவிகள் கூட மட்டமாக சிந்தித்து மக்களை பலி கிடாகலாக ஆக்குஹின்றார்கள்
அரசாங்கம் இதனை அவசரமாக அமுல் படுத்த வேண்டும் என்பது எனது ஆசை அப்போதுதான் அதன் விளைவுகளை அவசரமாக அனுபவிப்பார்கள்
ReplyDeletenebosh ஹலால் விடயத்திலும் இவ்வாறு அலட்டிகொள்ளாமல் இருந்த விளைவு இப்போது தெரிகிறதா?
ReplyDeleteஇத்தடை நடைமுறைச் சாத்திம் அற்றது. முன்வரும் உள்ளூராட்சித் தேர்தலை மனதில் வைத்து பெரும்பான்மைச் சமூகத்தை திருப்திப்படுத்தும் ஒரு கண்துடைப்பு!
ReplyDeleteHalaal namathu sontha pirachinai athaavathu muslimkalin pirachinai atharku kaddaayam pesi irukka vendum athanai kandu kollaamal ippa alladdi kolhinraargal
ReplyDelete