Header Ads



சிங்கலே யின் பின்னணியில் மஹிந்தவுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் - புலனாய்வுப்பிரிவு கண்டறிந்தது

சிங்க லே அமைப்பின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் சிலர் ஒன்றிணைந்து செயற்படுவதாக புலனாய்வுப்பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

தற்போதைக்கு இந்த அமைப்பினர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவது மற்றும் டீசர்ட் அச்சிடுதல் செயற்திட்டங்களின் ஊடாக தமது அமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சிங்க லே யின் பிரச்சாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த பிரச்சாரங்களின் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளருமான ஒருவர் செயற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்க லே அமைப்பின் முக்கியஸ்தர்களில் பெரும்பாலானவர்கள் ஜாதிக ஹெல உறுமய மற்றும் சிங்கள ராவய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தற்போது இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் நோக்குடன் செயற்பட்டு வருவதும் புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

1 comment:

  1. புலனாய்வு கண்டறிய வேண்டிய விஷயமல்ல. இது எல்லோருக்கும் தெரிந்த விசயம். BBS இன் பின்னாலும் சிங்கள வர்த்தகர்கள்தான் உள்ளார்கள். " முஸ்லிம்களின் வியாபாரஸ் தளங்களுக்கு அப சரனைய் , முஸ்லிம் ஹோட்டல்களில் அந்நியருக்கு 3 முறை துப்பி ( உமிழ்ந்து? ) சாப்பாடு பரிமாறுவார்கள் , முஸ்லிம்களின் வியாபாரங்களை புறக்கணிப்போம் என்று கோஷமிடுவது இதெல்லாம் சிங்கள வியாபாரிகள் முஸ்லிம் வியாபாரிகளின் மீதுள்ள பொறாமையால் தான் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது...

    ReplyDelete

Powered by Blogger.