மருந்துப் பொருட்களின், விலைகள் உயர்வு
அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பலவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக அரசாங்க வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரையில் உள்நாட்டு சந்தையில் காணப்படும் முக்கிய அன்டி பயோடிக் மருந்து வகைகளின் விலைகள் 200 முதல் 300 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளன.
புதிதாக மருந்து வகைகள் பதிவு செய்யப்படாமை மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு போன்றனவே இவ்வாறு விலை உயர்வடைவதற்கான காரணங்களாகும்.
தனியார் மருந்தகங்களில் மருந்து வகைகளை கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்களினால் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளே அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உயர்வினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசாங்க வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Already the drugs price is increased. Because of that, all the sales men are having car. Again it is going high.Now they are going to travel by plan. How we can bear this?
ReplyDeleteIs this a symptom of Maithri & ranil's good governance?
ReplyDelete