Header Ads



சார்லி ஹப்டோவின், மிக மோசமான அசிங்கம்

பிரான்சின் சார்லி ஹப்டோ பத்திரிகையானது கடந்த ஆண்டு துருக்கி கடலின் கரையோரத்தில் இறந்த நிலையில் கிடந்த அகதிச்சிறுவன் அய்லானின் புகைப்படத்தை வைத்து கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரான்சில் இயங்கிவரும் சார்லி ஹப்டோ பத்திரிகை எப்போதும், சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை வெளியிட்டுள்ள மக்களின் கண்டனத்திற்கு ஆளாவது வழக்கம்.

இந்நிலையில், ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 1,000 பேர் அடங்கிய புலம்பெயர்ந்த கும்பல் ஒன்று நூற்றுக்கணக்கான பெண்கள் மீது பாலியல் வன்முறை தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலால் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தை, கடந்த ஆண்டு உலக நாடுகளை கண்ணீரில் ஆழ்த்திய, அய்லான் என்ற சிரிய அகதிச்சிறுவனின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு கார்ட்டூன் ஒன்றை ஹப்டோ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், கரையோரம் இறந்துகிடக்கும் சிறுவன் அய்லானின் புகைப்படம் மற்றும் சிலர் ஓடுவது போன்ற கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

இந்த கார்ட்டூன் சித்தரிப்பது யாதெனில், சிரியா அகதிகள் பாலியல் குற்றங்களை புரியவதில் வளர்ந்து வருகிறார்கள், தற்போது இறந்துபோன அய்லான் சிறுவன் இருந்திருந்தால் கூட அவனும் இதில் ஈடுபட்டிருப்பான் என்று விளக்குகிறது.

சார்லி ஹப்டோவின் இந்த கார்ட்டூன் மக்கள் மத்தியில் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.



No comments

Powered by Blogger.