Header Ads



எண்ணெய் உற்பத்தியை உயர்த்துகிறது ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம் எச்சரிகை

ஈரான் மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்ட நிலையில், அந்த நாடு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்கள் உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் மேலதிகமான மசகு எண்ணெய் சந்தை மீட்சி பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று ஒபெக் உறுப்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் எச்சரித்துள்ளது.

நாளொன்றுக்கு அரை மில்லியன் பீப்பாய்கள் உயர்த்தும் திட்டத்தை ஈரானிய அதிகாரிகள் அண்மைய தினங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அதிகப்படியாக சந்தைக்கு விடப்படுவதால் மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சிகண்டு வருகிறது. எனினும் டெஹ்ரானின் மேலதிக எண்ணெய் உற்பத்தி சந்தைக்கு விடப்படுவது குறித்து அந்த நாடு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால் உற்பத்தியை அடுத்த மாதங்களில் அதிகரிப்பதாக அது உறுதி அளித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் ஒபெக் அமைப்பில் அங்கத்துவம் பெறாத ஓமான், ஈரானின் மேலதிக எண்ணெய் உற்பத்தி குறித்து கவலை வெளியிடவில்லை. ஏனெனில் ஏற்கனவே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டிருப்பதாக அது குறிப்பிடுகிறது. எனினும் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக ஓமான் அறிவித்துள்ளது.

சந்தைக்கு மேலதிக எண்ணெய்யின் வருகை குறித்த செய்தியால் கடந்த திங்கட்கிழமை எண்ணெய் விலை 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகப்படியான வீழ்ச்சியை பதிவுசெய்தது. எனினும் அந்த வீழ்ச்சி சற்று நேரத்தில் உயர்வு கண்டது. இதன்படி திங்கள் பின்னேரமாகும்போது ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 29.25 டொலருக்கு விற்பனையானது.

“தடைகள் நீக்கப்பட்டதால ஈரானால் எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்கள் அதிகரிக்க முடியும். உற்பத்தியை அதிகரிக்கும் உத்தரவு (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது” என்று பிரதி எண்ணெய் அமைச்சர் ரொக்னத்தீன் ஜவாதி குறிப்பிட்டார். ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவருமான அவர் அந்நாட்டின் ஷானா செய்திச் சேவையிடமே இதனை தெரிவித்தார்.

ஈரானின் அணு விவகாரம் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சனிக்கிழமை அகற்றிக் கொண்டது.

இந்த தடைகளால் அந்த நாடு 2011 இல் தடைகளுக்கு முன்னர் ஏற்றுமதி செய்த நாளொன்று 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் நாளுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்க்கும் குறைவானது.

இந்நிலையில் ஈரான் மீதான தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் முறை கருத்து வெளியிட்ட வளைகுடா ஒபெக் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியம், ஈரானின் மேலதிக எண்ணெய் உற்பத்தி மோசமான செய்தியாகும் என்று தெரிவித்தார். “ஈரானுக்கு இதனை செய்ய உரிமை இருக்கிறதா என்றால், ஆம் என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் அந்த நாடு ஒபெக் உறுப்பு நாடாகும். ஆனால் இந்த நிலை தற்போதைய சூழலுக்கு உதவுமா என்று கேட்டால், இல்லை என்றே கூற வேண்டும்” என்று ஐக்கிய அரபு இராச்சிய எரிசக்தி அமைச்சர் சுஹைல் பின் முஹமது அல் - மஸ்ருயி அபூதாபியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார்.

எண்ணெய் சந்தையை ஸ்திரமாக்குவதற்கு தமது உற்பத்தியை ஐந்து முதல் 10 வீதம் வரை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக ஓமான் அறிவித்துள்ளது. ஏனைய உற்பத்தி நாடுகளும் இதனை செய்ய வேண்டும் என்று ஓமான் எண்ணெய் அமைச்சர் முஹமது பின் அஹமது அல் ரம்ஹி குறிப்பிட்டுள்ளார்.

விலை வீழ்ச்சியால் ஒபெக் அங்கத்துவமற்ற நாடுகளின் எண்ணெய் விநியோகம் இந்த ஆண்டில் எதிர்பார்ப்பதை விடைவும் குறைவடையும் என்று ஒபெக் கணித்துள்ளது.

2016இல் ஒபெக் அங்கத்துவம் அற்ற நாடுகளின் எண்ணெய் விநியோம் நாளொன்றுக்கு 660,000 பீப்பாய்கள் குறையும் என்று ஒபெக் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னறிப்புச் செய்துள்ளது. கடந்த மாதம் நாளொன்றுக்கு 380,000 பீப்பாய்களாக குறையும் என்று ஒபெக் கணித்திருந்தது.

ஒபெக்கின் இந்த அறிவிப்பில் ஈரானின் ஏற்றுமதி நாளுக்கு 500,000 பீப்பாய்கள் அதிகரிக்கப்போவது குறித்து எந்த குறிப்பும் கூறப்படவில்லை. இந்த எண்ணெய் விநியோகம் ஒபெக் அங்கத்துவமற்ற நாடுகள் குறைத்திருக்கும் எண்ணெய் உற்பத்தியின் இடைவெளியை நிரப்பும் நிலை உள்ளது.

எவ்வாறாயினும் ஈரான் அதிரடியாக எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதில் சிக்கல் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த காலங்களில் செயலற்று இருந்த சூழலில் ஈரானின் வேகமான எண்ணெய் உட்பத்திக்கான உட்கட்டமைப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. இது ஈரானின் வஞ்ஞகத்தன்மையும் அன்மைய கசப்புமே வெருப்பேற்ரி நக்கள் நய்யான்டிபன்னி விழையாடுவார்கள் அதைநாம் பார்த்து ரசிக்கலாம் எனும் திட்டத்தில்தான் திடீரென சந்தர்ப்பம்பார்த்து ஈரான் மீதான தடைநீக்கத்தினை செய்தார்கள் அந்தவிழையாட்டை ஈரான் ஆரம்பித்துவிட்டது இந்த புகைச்சல் நெருப்பாக கூட மாரலாம் என்பதே உன்மை

    ReplyDelete

Powered by Blogger.