Header Ads



ஆசிரியரை விக்கெட் பொல்லால், தாக்கிய மாணவன் விளக்கமறியலில்

பாடசாலை பிரதி அதிபரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியதாக கூறப்படும் 17 வயது மாணவர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று இவரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை, பாடசாலை நேரத்தில் சந்தேகநபரான மாணவரைப் பார்த்து முடி வெட்டும் படி கூறியமையாலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தாக்குதலுக்கு இலக்கான பிரதி அதிபர் அப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.