காவி உடை தரித்ததற்காக, நீதித்துறை மீது அழுத்தம் பிரயோகிக்க முடியாது - வெலியமுன
நீதிமன்றை அவமரியாதை செய்வோரை தண்டிக்க வேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.
கொழும்பு புதுக்கடை உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று -26- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,
காவி உடை தரித்த காரணத்திற்காக நீதித்துறை மீது அழுத்தம் பிரயோகிக்க முடியாது, அவ்வாறு செய்ய பௌத்த பிக்குகளுக்கு பொலிஸ் மா அதிபரும், சட்ட மா அதிபரும் இடமளிக்கக் கூடாது.
வீதியில் அல்லது அரசியல் மேடையில் நடந்து கொள்வது போன்று நீதிமன்றில் நடந்து கொண்டால் அது நீதிமன்றை மலினப்படுத்துவதாகவே கருதப்பட வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசியல் தொடர்பு கொண்ட வழக்குகளிலும் இந்த விதமான பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
ஹோமாகம நீதிமன்றில் ஞானசார தேரர் நடந்து கொண்ட விதம் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
ஞானசார தேரரின் நடவடிக்கைகள் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன், சமூகத்திற்கு பிழையான செய்தியை கொண்டு சேர்க்கின்றது என ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.

Started yahapalana movie.weldon govt my3 group
ReplyDeleteStarted yahapalana movie.weldon govt my3 group
ReplyDelete