சிறந்த 'யூ ரிப்போர்ட்' விருது ஷாஜஹானுக்கு
(எம்.இஸட்.ஷாஜஹான்)
சக்தி, சிரஸ தொலைக்காட்சி சேவைகளின் சிறந்த 'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளருக்கான விருது எம்.இஸட். ஷாஜஹானுக்கு
சக்தி தொலைக்காட்சி சேவை, சிரஸ தொலைக்காட்சி சேவை, எம்.ரி.வி. தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின் 'யூ ரிப்போர்ட்' செய்திப் பிரிவின் ஏற்பாட்டில் மேல் மாகாணத்திற்கான சிறந்த 'யூ ரிப்போர்ட்' நிருபருக்கான (U- report Eagle 2014/2015 Award) விருது வழங்கல் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (24-1-2016) களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களில் சிறந்த 'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மூவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கம்பஹா மாவட்டத்திற்கான விருது (ரு- சநிழசவ நுயபடந 2014ஃ2015 யுறயசன) எம்.இஸட். ஷாஜஹானுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சக்தி,சிரஸ எம்.ரி.வி. தொலைக்காட்சி சேவைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஊடகவியலாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
இலங்கை அதிபர் சேவையை சேர்ந்தவரும், ஊடகவியலாளரும் கவிஞரும் எழுத்தாளருமான எம்.இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்) வீரகேசரி, மெட்ரோ நிவ்ஸ், விடிவெள்ளி, மாலை எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளின் நீர்கொழும்பு நிருபராக பணியாற்றுபவராவார்.
கலாநெஞ்சன் ஷாஜஹன் என்ற பெயரில் எழுதி வரும் இவர் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் , இஸ்லாமியப் பாடல் தொகுதிகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளதோடு, பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கல்வி முதுமாணி பட்டம், கல்விமாணி பட்டம் இதழியல் துறையில் டிப்ளோமா (கொழும்பு பல்கலைகழகம்), மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமா, கணனித் துறையில் டிப்ளோமா என்பவற்றையும் ஜனாப் எம். இஸட். ஷாஜஹான் பெற்றுள்ளார். அத்துடன் அவர் சமாதான நீதவானாகவும் உள்ளார்.
கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி. மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான ஜனாப் ஷாஜஹான் இலக்கியம் மற்றும் சமூக சேவை பங்களிப்புக்காக 'சாமஸ்ரீ தேச கீர்த்தி'; , 'கவியத் தீபம்', 'காவிய பிரதீப' ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment