சமையற்காரனுக்கு இருக்கக்கூடிய அரசியல் ஞானம் கூட, ஜீ.எல்.பீரிஸிடம் கிடையாது - ராஜித ஆவேசம்
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஓர் செல்லாக்காசு என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பு அறிமுகம் செய்வது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, ஜீ.எல்.பீரிஸ் ஓர் செல்லாக்காசு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சமஸ்டி முறைமையை கோரிய முன்னாள் அமைச்சர் பீரிஸ், தற்போது சிங்கள பௌத்த தேசப்பற்றாளராக மாற்றமடைந்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஜீ.எல்.பீரிஸிற்கு அமைச்சு பதவி ஒன்றை வழங்கியிருந்தால், புதிய அரசியல் அமைப்பிற்காகவும் அவர் குரல் கொடுத்திருப்பார்.
ஜீ.எல்.பீரிஸ் பிரபல அரசியல்வாதி என்.எம்.பெரேராவின் மருமகன் என்ற போதிலும் அவரது வீட்டு சமையற்காரனுக்கு இருக்கக்கூடிய அரசியல் ஞானம் கூட ஜீ.எல்.பீரிஸிடம் கிடையாது என ராஜித சேனாரட்ன விமர்சனம் செய்துள்ளார்.
Post a Comment