Header Ads



மகிந்த ராஜபக்சவின் ஆதரவு விகாரதிபதி, அரசாங்கத்திற்கு எதிராக சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார்

அரசாங்கம் துரோக வேலைகளைச் செய்துவருகின்றது என துறவிகள் குரல் அமைப்பின் தலைவரும் நாராஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாரதிபதியுமான முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் இன்று -04- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 8 ஆம் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்நிலையில், குறித்த திகதியில் கொழும்பு கோட்டையில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்த எண்ணியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

பௌத்த பிக்குகள் என்ற வகையில் ஒரு வருடம் பொறுத்துக்கொண்டோம். ஒரு வருடம் அமைதியாக இருந்தோம். அரசாங்கம் துரோக வேலைகளை செய்து வருகின்றது. இதனால், அதற்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்த எண்ணியுள்ளதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த அபயராம விகாராதிபதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இதனை ஒரு வருடத்துக்கு முன்பே செய்திருக்கலாமே! துரோகச் செயல்கள் இப்போது குறைவு.

    ReplyDelete
  2. சாகும் வரை இருந்து சாதனை படைத்து காட்டுங்கள் சீதேவி/மூதேவி

    ReplyDelete

Powered by Blogger.