Header Ads



கொழும்புக்கும் வடக்கிற்கும் இடையிலான, புகையிரத சேவையில் நேர மாற்றம்

கொழும்பு  தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கான ரயில் சேவை நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் புதிய நேர மாற்றம் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கொழும்புக்கும்  யாழ்ப்பாணத்துக்குமான யாழ்தேவி முன்னர் போல் கல்கிசையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு 6.35 க்கு புறக்கோட்டையை வந்தடையும் பின் புறக்கோட்டையிலிருந்து புறப்பட்டு முற்பகல் 10.40 மணிக்கு அநுராதபுரத்தையும் பிற்பகல் 2.37 மணிக்கு யாழ்ப்பாணத்தையும் பிற்பகல் 3.20 மணிக்கு காங்கேசன் துறையையும் சென்றடையும்.

இதேநேரம் யாழ்தேவி காங்கேசன் துறையிலிருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு முற்பகல் 9.25 க்கு யாழ்ப்பாணத்தையும் பிற்பகல் 1.50 க்கு அநுராதபுரத்தையும் வந்தடைந்து மாலை 6.32 க்கு புறக்கோட்டையை சென்றடையும். இதன் பின்னர் இந்த ரயில் கல்கிசை நோக்கிச் செல்லும்.

இதேவேளை தலைமன்னாருக்கும் கொழும்புக்குமிடையில் ஞாயிறு மட்டும் சேவையில் ஈடுபடும் ரயில் காலை 8.20 க்கு தலைமன்னாரில் இருந்து புறப்பட்டு முற்பகல் 11.55 க்கு அநுராதபுரத்தை வந்தடைந்து மாலை 4.25 க்கு புறக்கோட்டையை சென்றடையுமென ரயில்வே தரப்பினர் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.