Header Ads



உணர்வுகளும், உறுப்புகளும்


-குங்குமம் டாக்டர்-

பயத்தில் வயிற்றில் புளி கரைப்பது போல உணர்வதாகச் சொல்கிறோம்.கோபத்தில் ஆறாவது அறிவு வேலை செய்யாததை பிறகு உணர்கிறோம். 

சந்தோஷத் தருணங்களில் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதைஅனுபவிக்கிறோம். இதெல்லாம் சும்மா வார்த்தை  ஜாலங்களுக்காக சொல்லப்படுகிறவை அல்ல. உண்மையிலேயே ஒவ்வொரு உணர்வுக்கும், நம் உடல் உறுப்புகளுடன் நெருங்கிய  தொடர்புண்டு என்கிறது உளவியல் மருத்துவம்! அதன்படி,

கோபம் உங்கள் கல்லீரலை பலவீனப்படுத்துகிறது.

துயரம் நுரையீரலின் வலிமையைக் குறைக்கிறது.

கவலை  உங்கள் இரைப்பையை பலவீனப்படுத்துகிறது.

மனஅழுத்தம் இதயம் மற்றும் மூளையை வலுவிழக்கச் செய்கிறது.

பயம் சிறுநீரகத்தை பாதிக்கிறது. 

அன்பு அமைதியை அளித்து உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்துகிறது.

சிரிப்பு மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. புன்னகை மகிழ்ச்சியைப் பரவச் செய்கிறது. 

No comments

Powered by Blogger.