சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரா குறித்து, வெளியாகும் தகவல்கள்..!
பொதுபல சோன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பல்வேறுவிதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடப்பாண்டின் சிறந்த நடிப்பிற்கான களமாக சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டுள்ள ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
மிருகக்காட்சி சாலைக்கு புதிதாக ஒரு மிருகம் கொண்டு வரப்பட்டால் அதனை பார்ப்பதற்கு வருபவர்கள் போவர்கள் போன்று, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை பார்க்க பலர் வந்து சென்றுள்ளனர்.
அத்துடன் தேரர் குளிப்பதற்கு தண்ணீர் எடுத்து கொடுத்த தெமட்டகொட பாதாளகுழு உறுப்பினர் மற்றும் மலசல கூடத்திற்கு தண்ணீர் எடுத்து கொடுத்த மருதானை போதைப்பொருள் வியாபாரி ஆகியோர் ஊடகங்களில் மிகவும் பிரபலமாயியுள்ளனர்.
சமூகத்தின் முக்கியஸ்தர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டால் நோய் இருந்தாலும் இல்லை என்றாலும் சம்பிரதாயத்திற்கமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள். இவற்றினை நிராகரிக்கும் ஞானசார தேரர் இறுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக கோளாறு காரணத்தினாலே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் அவர் முகம் கொடுக்காத முக்கிய பிரச்சினை ஒன்று முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் சிறையில் அடைக்கப்பட்ட நாட்களிலிருந்து இரவு வேளையில் உணவு உண்ணாமல் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கும் இரவுநேர உணவு, காவலில் வைக்கப்பட்டுள்ள துறவிகளுக்கு வழங்கப்படாமையினால் தனது துறவர வாழ்கையில் முதல் முறையாக இரவு நேரத்தில் பட்டிணி கிடக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.
துறவிகளுக்கு தியாகங்கள் ஒன்றும் புதிதல்லவே!
ReplyDeleteஉங்கள் தியாகங்கள் தொடரட்டும் - தேரரே!
தாங்கள் செய்த பாவங்களுக்காக இவருக்கு தண்ணீர் கொடுத்து இன்னோறன்ன உதவிகள் செய்தால் பரிகாரம் கிடைக்குமென நினைத்துள்ளார்கள் போல்...பாவம்
ReplyDelete