ஹிருணிகா தனது பிழைகளை ஏற்றுக் கொண்டு, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் - ரவி
பொலிஸாருக்கு தற்போது சுதந்திரமாக தமது கடமைகளைச் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம் எனவும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது பக்கத்திலுள்ள பிழைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இதன்படி அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னர் பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய பலருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பில் தற்போது 75,000 வீடுகள் பற்றாக்குறையாக உள்ளதாக சுட்டிக்காட்டிய ரவி கருணாநாயக்க, எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment