நல்லாட்சியையும், விக்னேஸ்வரனையும் விளாசித்தள்ளும் விமல் வீரவன்ச
வடிகானை சுத்தம் செய்யுமாறு இராணுவத்தினருக்கு கூறும் அளவிற்கு வட மாகாண முதலமைச்சருக்கு நல்லாட்சி அரசாங்கம் பலத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு நேற்றுடன் ஒராண்டு பூர்த்தி அடைகின்ற நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய விமல் வீரவன்ச,
நல்லாட்சியினர் பிரிவினைவாதத்திற்கு பலத்தை வழங்கியுள்ளனர்.
சிவாபசுபதி இலங்கைக்கு வருகைதந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
புலிகளின் சின்னம் உள்ளிட்ட சேட்டை அணிந்து வடக்கில் இருக்க கூடியவாறு சூழல் மாறுபட்டுள்ளது.
நாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை வடக்கில் வடிகாலை சுத்தப்படுத்துமாறு கூறுகின்ற அளவிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பலம் கிடைத்துள்ளது.
பிரிவினைவாதம், இனவாதம் கடும்போக்குவாத குழுக்கள் இந்த வருடத்தில் பலம் பெற்றுள்ளன சூரூஸ் என்பவர் உலகில் உள்ள நிதி மோசடியாளர். பல நாடுகளின் கறுப்புபட்டியலில் உள்ளடக்கப்பட்ட நிதி மோசடியாளர்.
அவரை சுற்றுலா பயணியாக கூட நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என மலேஷியா அறிவித்துள்ளது. நாடுகள் பலவற்றை கீழ் நிலைக்கு கொண்டு சென்றவர் சூரூஸ்
ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள நிதி மோசடியாளர் இவர். அந்த நிதி மோசடியாளரை தான் இன்று பொருளாதார பின்னடைவை இல்லாது செய்யும் பெரிய தேவ தூதராக நல்லாட்சி அரசாங்கம் நியமித்துள்ளது.
இந்த அரசாங்கம் செல்லக் கூடிய பயணம் ஒன்று இல்லை என்பது இதன்மூலமே தெரிகின்றது.
பொய்யான விசேட உரைகள் மூலமும் கதைகள் மூலமும் இந்த நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதன் மூலம் அவர்களின் வயிற்றை நிரப்ப முடியும் என இவர்கள் நினைக்கின்றனர் என்றார்.
ஒரு பகிரங்க இனவாதி வடக்கின் அடிப்படைவாதியை (விக்கி) சாடுவதில் சில உண்மைகளும் உண்டு
ReplyDeleteசட்டம் இயற்றும் பொறுப்பு நன்கு கற்றறிந்த கல்வி மேதைகளை கொண்டுதான் தயாரிக்க வேண்டும் அதை விடுத்து உன்னைப்போல் எட்டாங் கிளாசில் சமூகக்கல்வி உட்பட எழு பாடம் பைலப்போனவர்களை கொண்டு தயாரிப்பது இல்லை.நீயல்லாம் சொல்வதை காலமெல்லாம் கேட்டுக்கொண்டு யாரும் இருக்க மாட்டான் சிறு பான்மையின் உருமைகள் நியாயமாக வழங்கப்பட வேண்டும் அதற்க்கு சட்டவல்லுனர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
ReplyDelete