முஸ்லிம்களின் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நாடும் பாதுகாப்பு அமைச்சு
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணுவோர் பற்றிய விபரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து அந்த அமைப்பில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
இவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீவிரவாத அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காக சமூக வலையமைப்புக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்கள் ஏனையவர்களை இணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
இந்த முயற்சியானது தேசியப் பாதுகாப்பிற்கு தற்போதைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத போதிலும் அவர்களது முயற்சிக்கு இடமளிக்கப்படாது.
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு பேணுவோர் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பு செய்வதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதம் பரவுவதனை தடுத்து நிறுத்த முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமானது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கொழும்பு ஊடகமொன்றுக்கத் தெரிவித்துள்ளார்.
கட்டாயம் ஒத்துளைப்பு வழங்க வேண்டும் அப்போதுதான் மற்றைய முஸ்லிம்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் அதேவேளை எடுத்ததுக்கல்லாம் பழைய கொபக்காரங்களையல்லாம் காட்டிக்கொடுக்கும் வேலையை காட்டாமல் உண்மையை நிலை நாட்ட வழிவகுக்க வேண்டும்.
ReplyDelete