மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை, ஏன் நிராகரிக்க வேண்டும்..?
-MB.முஹம்மது ஸில்மி, மருத்துவ மாணவன்-
நேற்று (2016.01.13) இலங்கையிலுள்ள ஏழு அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் இணைந்து கொழும்பிலும் யாழ். பல்கலைக்கழகத்தினால் யாழிலும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியினால் இலங்கைக்கு ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துறை கற்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி பற்றியும் சாத்வீகப் போராட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
பொதுமக்களில் பலருக்கு இது விடயத்தில் உள்ள தெளிவின்மையை களைவதற்கும் பணத்துக்கு விலை போன சில அரசியல்வாதிகள் மற்றும் கல்வி கற்று பட்டம் பல பெற்றும் முட்டாள்களாய் நடந்து கொள்ளும் அறிவீனர்கள் இது பற்றி கூறும் கருத்துக்களில் உள்ள பொய்களை அம்பலப்படுத்தும் வண்ணமும் இக்கட்டுரை வரையப்படுகின்றது.
அரச பல்கலைக்கழகங்களின் வளங்களை சூறையாடி இலவச கல்வியை முறையை செயலிழக்கச்செய்து அவற்றிற்கு மாற்றீடாக தனியார் பல்கலைக்கழகங்களை மக்கள் முன் அறிமுகப்படுத்தி பணம் சம்பாதிக்கும் முறை இன்று நேற்று அல்ல சுமார் 30 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இதற்கெதிராக மாணவர்கள் ஆட்ஷேபனை தெரிவித்த போதெல்லாம் அவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டன.
அதிகாரத்திலிருந்தோர் பணத்துக்கு அடிமையாகி அதர்மத்தின் பக்கம் தலைசாய்த்தனர்.
விளைவு...??? தனியார் பல்கலைக்கழங்கள் ஆங்காங்கே தலைதூக்க தொடங்கின. அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் பணம் கொடுத்து வாங்கப்பட்டனர். அரச பல்கலைக்கழகங்களின் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை அந்தோ பரிதாபமானது. கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இலவசக்கல்வி முறை பாதிக்கப்படுவதனை எதிர்த்து மாணவர்கள் போராடத்தொடங்கினர்.
இதனை சகிக்க முடியாத அதிகாரத்திலிருந்தோரால் மாணவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.இற்றை வரை இதற்காக போராடிய மாணவர் ஒன்றியத்தின் தலைவர்களில் சுமார் 10 பேர் வரிசையாக கடத்தப்பட்டு மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன்தொடராகவே கடந்த 2010 ஆம் ஆண்டு மாலபே எனும் இடத்தில் SAITM எனும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
இதன் விளைவுகள்.
1. இதுவரை காலமும் மாவட்டத்தில் அதிகூடிய சித்திகளைப்பெற்று திறமை அடிப்படையில் வடிகட்டப்பட்டு மருத்துவ துறை கற்பதற்கு தெரிவாகின்றனர்.
இதற்காக ஆகக்குறைந்தது A 2 B அல்லது 2AB பெற்றிருக்க வேண்டிய நிலைமையில் வெறுனே 3 S களை பெற்ற ஒருவரால் பணம் இருந்தால் மருத்துவம் கற்கும் நிலை தோன்றியுள்ளது.
2. இதன் காரணமாக தரமற்ற வைத்திய சமுதாயம்,நம்பகத்தன்மை குறைந்த சுகாதாரத்துறை உருவாகும் ஆபத்து உள்ளது.
3. இலங்கை அல்லாத வேறுநாடுகளில் மருத்துவம் பயிலும் ஒருவர் இலங்கையில் தொழில் புரிய வேண்டுமாயின் அரச மருத்துல சங்கத்தினால் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தி அடைய வேண்டும்.
ஆனால் மாலபே தனியார் கல்லூரி மாணவர்கள் இவ்வாறான பரீட்சை எழுதாமலேயே நேரடியாக தொழில் புரிய முடியும் என்பதனால் இவர்களது திறமையின்மை மூடி மறைக்கப்பட்டு மற்றும் நம்பகத்தன்மையற்ற வைத்தியம் மக்களை அடைய வழிகோலும்.
4. இவர்களுக்கென்று தனியான போதனா வைத்தியசாலை கட்டிகொடுக்கப்பட்ட போதிலும் தமது மருத்துவ பயிற்சியினை (clinical practice ) கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஹோமாகம,மஹரகம,அவிஸ்ஸாவலை, ஜெயவர்தனபுர,நாரஹேன்பிட்டிய ஆகிய அரச வைத்தியசாலைகளில் தொடர அனுமதி கேட்டு வழக்குதாக்கல் செய்திருப்பதனால் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு களனி,கொழும்பு,ஜெயவர்தனபுர பல்கலைக்கழங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
5. பொதுவாக ஒரு மருத்துவ மாணவனுக்கு/வைத்தியருக்கு மிக அவசியமான பாடங்களான anatomy , physiology , biochemistry ஆகிய மூன்று பாடங்களும் முழுமையாக இரண்டு வருடங்கள் அக்குவேரு ஆணிவேராக கற்பிக்கப்படும்.ஆனால் இத்தனியார் கல்லூரியில் வெறும் ஆறே மாதங்கள் நுனிப்புல் மேய்வது போல் கற்பிக்கப்படுகிறது.
இதிலிருந்து இக் கல்லூரியிலிருந்து வெளியாகும் மாணவனின் தகைமை பற்றி பாமர மகனால் கூட கூறிவிடமுடியும்.
6. ஒவ்வொரு வருடமும் அரச பல்கலைக்கழகங்களிலிருநது சுமார் 1000 மருத்துவ பட்டதாரிகள் வெளியாகி மருத்துவ தொழில்பயிற்சியினை (Internship) மேற்கொள்ளும் நிலையில் அவ்வெண்ணிக்கையினை 600 ஆக குறைத்து தனியார் கல்லூரி மாணவர்கள் 400 களை திட்டமிட்டிருப்பதாக தெரியவருகினறது. இதன் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு கல்வி பயிலும் அரச மருத்துவ மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
இவ்வாறாக அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர்களின் வளங்களை சூறையாடி ; திறமை குன்றிய , நம்பகத்தன்மை அற்ற சுகாதாரத்தை வழங்கும் வழங்கும் வைத்தியர்களை உருவாக்கும் பொறிமுறையை ஒழிக்க இச்சாத்வீகப் போராட்டத்தில் நாமும் இணைவோம்.
Private education good for our country,then they can bring more doctors and health professionals,(3s in A/l mean he or she complete A/l successfully)so pls don't bring.it's a big issue we all srilankans we all need some opportunities,bank can provide high education loan for everybody,regulators will make sure the qualification so pls don't do politics with who miss the bus let them to have life as you like to have on Srilanka we don't need no more crocodile tears
ReplyDeleteWhat you are saying is true..but after becoming doctors. ..you all so called governmrnt university doctors becoming worst than devil.....you all forgetting free education and becoming money suckers.
ReplyDeleteYou must also be able to explain the other side of this initiative. This is only one sided.
ReplyDeleteEvery action has pros and cons!
If there are any short comings in the private medical Colleges you must advise them to correct it . It is not correct to tell them to close it. We need more universities for people to study. because government alone can not do this. If you are really against private colleges what about the tuition classes held for A/L. Even There, only people who can afford financially can get the service of best tuition classes. If you are basically against private educational institution then you must protest against all the private educational institutions such as A/L classes, institution teaching accounting education, teaching engineering education virtually all the private institution. Why only medical colleges.It is because you are jealous.In fact the government alone can not afford to provide the free education to the extend of the demand.It is always a good sign that the private sector has ventured in to the educational needs of the public. You people are scared that you all will not be able to maintain the scarcity of doctors so that you can maintain the expensive fees and suck blood of poor people.
ReplyDeleteHi,
ReplyDeleteWrite your essay based on facts and figures instead of guessing. Why we can't have private education? Think about the developed nations. They have both sectors. When you have both sectors, it drives the improvement of quality of education. You can't say WE have the sole right to become quality doctors.
Brother Mubiene Noor! You are absolutely right Private universities are very important to improve the country.
ReplyDeleteBy his illogical and absurd reasons Mr. ( or Dr.?) Hilmy has exposed the "intelligence" of govt medical students.
ReplyDeleteWhat the tax payer funded government Uni Doctors going to give back to the country...First you guys will seek for a BIG DOWRY, then strike for not having PERMIT for cars....NO USE
ReplyDeletedear all, everybody has the rights to study where ever they wish.. government or private universities but all have to sit for MBBS exam from government only.
ReplyDeleteWhy a guy cannot afford a medicine in degree if he has 3s and improve the quality of proffessionalism with a good methods of structured exams if country needs experts in this feilds without bluffing the quality of free education mbbs passout dumps.
ReplyDeleteMohamed shamli- a future doctor?with this much of venom against those could not enter UNI because of ridiculous system of Srilanka. Do you know tyhere are many students with 4A but could not enter UNI? Take the example of Colombo district. there are many qualified students with higher grades where in an other district with much less grades they enter UNI. so what is your argument about those left out with higher grades and those entered with lower grades because they from an other district.? Man you are making me worried as you are a future doctor and how you going to treat those poor patients who will come to you. show some Intellect Mr M B M Shamli. ( hopefully I wont see you a a patient)
ReplyDeleteMohamed shamli- a future doctor?with this much of venom against those could not enter UNI because of ridiculous system of Srilanka. Do you know there are many students with 4A but could not enter UNI? Take the example of Colombo district. there are many qualified students with higher grades where in an other district with much less grades they enter UNI. so what is your argument about those left out with higher grades and those entered with lower grades because they from an other district.? Man you are making me worried as you are a future doctor and how you going to treat those poor patients who will come to you. show some Intellect Mr M B M Shamli. ( hopefully I wont see you as a patient)
ReplyDeleteதனியார் மருத்துவக்கல்லூரியை எதிர்ப்பதுடன் தனியார் வைத்தியசாலைகளையும் எதிர்ப்பதே நியாயமாகும். அரச வைத்தியசாலைகளில் கடமை(?)யாற்றிக்கொண்டு தனியார் வைத்திசாலைகளிலும் பணத்துக்காக வேலைசெய்யும் வைத்தியர்களின் சுயரூபத்தையே இது காட்டுகிறது
ReplyDeleteAAA,AAB,ABB
ReplyDeleteThose who got results will get state universities and will be selected for Medical or Dental.
Absolutely correct
Those who got BBB,BBC may be selected for some other courses
Others????
Does this gentleman say they are nuts and doesn't have any ability to learn more,
It's there he is mistaken
How can he say from an EXAMINATION a group of students are bright and others are not.
It's absurd there are children who won't present wellin an examination but naturally they are bright and talented
In some cases a student can score depending on the type of questions the environmental factors health condition of the candidate the surrounding officials and a lots of contributing factors
In another case a bright student can come down to various factors
My argument is its not the grade which should be considered to divide the students
A is also pass and the S is also pass
Both should be given the opportunity to study
If the students of S grade can afford in a private university let them study and get there degree
Why the hell these students are so stupid to deal in others education
It's their right to study and they will go anywhere in the world to get it
If they are rich its their parents will spend
Some they sell their properties and get their education
It's very irrational for these types of lunatics to come to the road and protest
It's their mental ailments which make them to shout against their own brothers and sisters
O/L பரீட்சையில் 3A,2A பெற்று ஏனைய பாடங்களிலும் சித்தி பெற்ற ஒருவர் உயர்தரத்தில் தன் திறமையை வளர்த்துக் கொண்டு 3A பெற்று வைத்திய பீடம் செல்ல முடியும் எனின் A/L இல் 3S எடுத்த ஒருவர் இந்த 4 வருட காலப்பகுதியில் வைத்திய துறைசார் திறமைகளை ஏன் வளர்த்துக் கொள்ள முடியாது? நிச்சயம் முடியும்..தரமான கல்வி எங்கு கிடைத்தாலும் அதனை கற்க அனுமதிப்போம்..
ReplyDeleteஇலவசக் கல்வியை அரசு ஒழிக்க நினைப்பதாக கூறும் இவர்களின் பெற்றோர்கள் திருமணம் பேசும்போது பெண் வீட்டாரிடம் கூறும் வசனம் தான் " என் பிள்ளய படிக்க வைக்க எவ்வளவு செலவழிச்சிருக்கன் தெரியுமா? ( உண்மைச் செலவிலும் ஆயிரம் மடங்கு கணக்கு சொல்வார்கள்).
A/L என்பது ஒருவனின் அறிவு மட்டத்தை அளவுடும் அலகல்ல.. இலங்கையின் இலவச கல்வித்துறையில் ஒருவனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இறுதி வாயப்பு அவ்வளவுதான்.
இதன் பின்னும் ஒரு பரீட்சை இருந்திருந்தால் வேறு அணியர் பலர் குறித்த துறைகளுக்கு தெரவு செய்யப்படலாம்..
முகம்மது சிலமி அவர்களே, என்னுடைய சில வாதங்களை சற்று நினைவில் வைதுக்கொல்லுங்கள்.
ReplyDelete1) உங்களுடைய வாதப்படி வெளிநாட்டில் பபடித்த வைத்தியர்கள் உள்நாட்டு பரிட்சை எழுதிய பின்னர்தான் வைத்திய சேவை செய்ய அனுமதிக்கபடுவார்கள் என்றீர்கள், அப்படி என்றல் அவ்வாறானதொரு நடைமுறையை தனியார் பல்கலைகழகங்களில் படிக்கும் மனவகளையும் பின்பற்ற சொல்லி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாமே, அதை விட்டு விட்டு வெறுமனே சுயநலத்துக்காகவும் , பணம் சம்பாதிக்கும் ஆசைக்காகவும், எதிகாலத்தில் தங்களுக்கு இணையாக அதிக வைத்தியர்கள் உருவாவதை தடுக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் அல்லாஹ் கொடுத்த அறிவை வைத்துக்கொண்டு செயல்படுகின்றிர்கள் ஏன்?
2) உங்கள் வாதத்தின் பிரகாரம், தனியார் பல்கலைகலகத்தை எதிர்க்கும் நீங்கள் ஏன் தனியார் வைத்தியசாலைகளை எதிர்பதில்லை, ஏன் தனியார் வைத்தியசலைகலால் அரச வைத்தியசாலைகளின் தரம் குறைக்கப்படுவதில்லை என்ற குருட்டுத்தனமான என்னமா அல்லது தனியார் வைத்தியசலைகளினூடாக தங்களுக்கு கிடைக்கும் அளப்பெரிய வருமானம் நின்று போய்விடும் என்ற அங்கலைப்பா?
3) ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், ஒருவருடைய அறிவை அல்லாஹ் எப்போது விருத்தி செய்வான், எப்போது மடக்கிவைப்பான் என்று உங்களால் சொல்ல முடியாது. உதாரணம், O/L பரிட்சையில் குறைந்த தரத்தில் சித்தி பெற்று A/L பரிட்சையில் அதிக புள்ளி பெற்று பல்கலைகழகம் சென்று Engineer அல்லது Doctor களாக வந்தவர்கள் எமது நாட்டில் நிறையபேர் உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியவில்லையா, அந்தவகையில் A/L பரிட்சையில் 3s எடுத்தவர்கள் எப்படி டாக்டர் க்கு படிக்க முடியாது என்பீர்கள்? ஆக உங்களுடைய சுயலபதுக்காக வைக்கபடுகின்ற வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் எனூட்ய வாதம்.
4) உலகில் உள்ள அனைத்து முன்னேறிய நாடுகளிலும் இந்த தனியார் பல்கலைகழகங்கள் உள்ளதென்பதை உங்களால் மறுக்க முடியுமா ?
@ Mubiene Noor your are absolutely right. Private education is good for a country but you mentioned about bank loan, is it good for Muslims ? If you are talking about student finance like in England ( no interest is being charged on this ) then it's good, otherwise it's not good to study by taking riba ( interest ) do not forget no matter what we are Muslims. We have to avoid haram ways as much as we can.
ReplyDelete@ Noorul Ameen ! Well directed questions.
Note :
We Muslims need more female doctors. We should Encourage our girls to study. education is important whether it's through private or public sector.