Header Ads



ஹக்கீமிடம் மகஜர் கையளிப்பு, கோரிக்கைகளை நிறவேற்றுவதாக உறுதியளிப்பு


-மௌலவி:-ஏ.ஏ.ஏம்.பர்ஸாத்(ஹாமி)-

2016-01-22 ஆம் திகதி ஜும்மா தொழுகையின் பின் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் நற்பிட்டிமுனையின் அபிவிருத்தி சம்மந்தமான கூட்டம் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமாகிய அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்களும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமாகிய அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் சுகார பிரதி அமைச்சருமாகிய அல்ஹாஜ் எம்.சி.எம்.பைசல்காசிம் அவர்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பிட உறிப்பினர்களும் மற்றும் நற்பிட்டிமுனையின் உலமாக்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் நற்பிட்டிமுனையின் அபிவிருத்தி சம்மந்தமாக நற்பிட்டிமுனையின் அனைத்து பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபை தலைவர் விரிவுளையாளர் மௌலவி ஏ.எல்.நாசீர்கனி (ஹாமி) எம்.ஏ அவர்கள் எட்டு அம்சகோரிக்கை அடங்;கிய மகஜரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமாகிய அல்ஹாஜ் றஊப் ஹக்கீம்; அவர்களிடம் ஒப்படைத்தார்.மேலும் இம்மகஜரை பொது மக்களுக்கு முன்னால் அனைத்து பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபை தலைவர் வாசித்தும் காண்பித்தார்.

இக்கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமாகிய அல்ஹாஜ் றஊப் ஹக்கீம்; அவர்கள் நற்பிட்டிமுனை பொது மக்கள் முன் வாக்களித்தார். அதுமட்டுமன்றி முக்கியமாக நற்பிட்டிமுனை பொது மைதானத்தையும் பாடசாலையையும் நவீன முறையில் அபிவிருத்தி செய்து தருவதாக விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் வக்களித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.       
  

No comments

Powered by Blogger.