யாழ்ப்பாண ராணுவ தளபதியாக மகேஸ் சேனநாயக்க
யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் என். யூ. எம். மகேஸ் சேனநாயக்க, வியாழக்கிழமை (28) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றுக்கொண்டார்.
இதுவரை காலமும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை, கடந்த 20ஆம் திகதி கொழும்பு இராணுவத்தலைமையகத்து இடமாற்றம் பெற்று சென்றிருந்தார். இவ் வெற்றிடத்துக்கு இராணுவ செயலாளராக கடமையாற்றிய மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment