"சிங்க லே" (சிங்கத்தின் இரத்தம்) வியாப்பிக்கிறது
நாடளாவிய ரீதியில் ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் கலாசாரமொன்று அதிகரித்து வருகின்றது. "சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள்" என்று பெருமை பேசும் வாசகங்களுடன் இந்த ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
"சிங்க லே" (சிங்கத்தின் இரத்தம்) என்பதே குறித்த ஸ்டிக்கரின் வாசகமாகும்.
சிங்கள இனப்பற்றுள்ள அனைவரும் தமது வாகனங்களில், வர்த்தக நிலையங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னணியில் சிங்கள பேரினவாத சக்திகள் முழுமூச்சாக இயங்கி வருவதோடு நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி அதில் குளிர்காய எத்தனிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே இலங்கையின் தேசியக் கொடியில் சிறுபான்மையினரைக் குறிக்கும் பகுதியை நீ்க்கிய குறித்த இனவாதக் கும்பல், தற்போது அதிலும் சிங்கத்தின் உருவத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு இலட்சினை பொறித்து ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் மூலமாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர்.
இந்த ஸ்டிக்கர்கள் கவரக்கூடிய வாசகங்களை வர்ணங்களை கொண்டு அச்சடித்து விற்பனை செய்தும் குறிப்பிட்ட சில பாதையோரங்களில் பலாத்காரமாக வாகனங்களில் ஒட்டப்பட்டும் வருகின்றன.
இந்த சிங்க லே என்ற இலட்சினையுடன் விற்பனை செய்யப்படும் ரீஷேர்ட்டுகள் 3,500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறான ஸ்டிக்கர்கள், ரீஷேர்ட்கள் கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் குறித்த இனவாதக்குழு பெருந்தொகையில் வருமானம் ஈட்டி வருகின்றது.
இவ்வாறான பிரசாரங்கள் எதிர்காலங்களில் இனக்கலவரங்களை தூண்டுவதற்கான முன்ஆயத்தமாக இருக்கலாமென்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு எதிர்காலத்தில் இனக்கலவரமொன்றைத் தூண்டி பெரும் சேதங்களை ஏற்படுத்தவும் அதன் போது சிங்களவர்களின் சொத்துகளை குறித்த ஸ்டிக்கர் அடையாளத்தினூடாக பாதுகாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.
மேலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக் கலவரமொன்றை ஒரே நேரத்தி்ல் கட்டவீழ்த்து விடுவதற்கான செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதற்கான முன்னோட்டமாக இந்த ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் விற்பனை தென்படுவதாக சிவில் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நாட்களில் துரிதமாக பரவி வரும் "சிங்க லே" என்ற அமைப்பு யாரது தேவைக்காக எவரால் நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. இருந்தும் இதைப் பார்க்கும் போது ஏதோவொரு அமைப்பு திட்டமிட்ட வகையில் இதை பரப்பி வருவதாக தெரியவருகிறது.
இதன் பின்னால் யாரோ ஒரு முக்கியஸ்தகர் செயற்படுகின்றார் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகின்றது. இது ஒரு வேளை மஹிந்தவின் கருவிலிருந்து உருவாகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
இற்றைவரையில் இவர்களது பேஸ்புக் கணக்கு இனவாத கருத்துக்களை பரப்புவதாக மட்டுமின்றி வாகனங்களில் ஒட்டுவதற்கு இலவசமாக ஸ்டிக்கர்களை வழங்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது.
எமதுநாட்டில் தமிழர்களோ முஸ்லீம்களோ எதாவது சொல்லமுற்பட்டால் புலிக்கொடி பரக்குது ISIS தீவிரவாதம் முஸ்லீம் பயங்கரவாதம் தலைதூக்கும் நிலமை கானப்படுகிரதென்ரு முன்னால் ஆட்சியாலர்கூட சுட்டிக்காட்டும் அலவுக்கு தீவிரபோக்கு கானப்படும்போது இது என்னவகையான தீவிரவாதம் இந்தபோக்கு சரியா நீங்க செய்தால் நாட்டுப்பற்ரு சிருபான்மை செய்தால் தீவிவாதமா?அப்போதும் சரி இப்போதும் சரி வித்திட்டவர்கள் விதைத்துக்கொன்டிருப்பவர்கள் யார் என்பது வெட்டவெழிச்சமாக தெரியவில்லையா மதிப்புக்குரிய தலமைகளே???????????
ReplyDeleteUnmaiyana SINGA LE Yarundu sonnal muslimgal than so entha pirachinaikku theervu entha stiker i sinnathoru vithiyasathil print panni namathu vehicle and house layum ottuvathu same name el. ethuve evargaluduaya mugathil saniyai poosiyathu pol erukkum
ReplyDeleteApitath thiyanne " Singha Le" thamai.
ReplyDeleteசிங்கத்துடன் குடும்பம் நடத்திய மனித பெண்ணுக்கும் சிங்கத்துக்கும் நடந்த கலவியில் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்பது சுத்த அபத்தம். பண்பாடற்ற காம குதர்க்கம். சிங்கத்துக்கும் அப்பெண்ணுக்கும் பிறந்த இரு பிள்ளைகளின் (அண்ணனும் தங்கையும்) கலவியில் பிறந்த வழித்தோன்றல்களே சிங்களவர்களென்பது வயிற்றை குமட்டும் பிறழ்விழைச்சு. இந்த அசிங்கத்தை நாக்கூசாமல் பெருமையடிப்பதற்கு என்ன இருக்கின்றது? இதை நான் குறிப்பிடுவது எனது சிங்கள சகோதரர்களின் மனதை புண்படுத்துவதற்காக அல்ல.மன்னர் காலத்தில் சிங்கத்தின் இரத்தம் என்பது இவ்வினத்தவரின் வீரத்தை குறிப்பிட பயன்படுத்தப்பட்ட ஓர் அடைமொழியாக இருந்திருக்கலாம்.
ReplyDeleteஆனால் ”சிங்கத்தின் இரத்தம் (சிங்க லே)” இது நன்கு திட்டமிடப்பட்டு தூரநோக்கோடு செயற்படுத்தப்பட்டுவரும் ஒரு இயக்கமாகவே நோக்கவேண்டி இருக்கிறது. மிக நுணுக்கமாக கவர்ச்சியான விளம்பரங்களுடன் முன்னெடுக்கப்படும் ஓர் இனவாத நகர்வு. பார்வைக்கு பைத்தியக்காரத்தனமாகவோ அல்லது கவர்ச்சியாகவோ தோன்றி பாரதூரமாக பார்க்கப்பட வேண்டியதொரு விடயமல்லவென தெரிந்தாலும் இதுவொரு மிகவும் பாரதூரமான முடிவை நோக்கிய நகர்வு.
வரலாறு நெடுகிலும் இதனை காணலாம்.
ஹிட்லரின் நாசி நகர்வு, மியன்மார் விராதுவின் தேசியவாத நகர்வு, இவற்றின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் இவையே.
சிங்களே ஆரம்பகால சிங்கள மன்னர்கள் இந்நாட்டை அழைத்த பெயர்.
1.வழக்கொழிந்த பெயரை மீண்டும் ஜனரஞ்சகமாக்குதல்.
2.அதனை மாற்றுப்பெயராக செல்லப்பெயராக பயன்பாடுத்தும் கலாசாரத்தை உண்டாக்குதல்.
3.சிங்கத்தை மட்டும் பிரித்து பெருமையளிக்கும் ஆபரணமாக்குதல்.
4.சிங்கம் மட்டும் கொண்ட கொடியை தேசிய கொடியாக அல்லாமல் ஜனரஞ்சகமாக்குதல்.
5.சிங்கள பெளத்த கலாசார திணிப்பு.மாற்று கலாசார மறுப்பு.
6.சிங்கள பெளத்தர் பூர்வீககுடிகள்,மற்றெல்லோரும் வந்தேறிகள் எனும் மனநிலையை உருவாக்கல்.
7.இனச்சுத்திகரிப்பை ஆரம்பித்தல். விஸ்தரித்தல்.
வரலாறு காட்டும் படிமுறைகள் இவை.