எகிப்தில் முபாரக் காலத்தை விடவும், தற்போதைய சூழல் மோசம்
எகிப்தின் நீண்ட நாள் ஆட்சியாளர் ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்த்த 2011 மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறை நிகழ்வு இடம்பெற்றதோடு அதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
எகிப்தின் இராணுவ ஆதரவு அரசுக்கு எதிராக ஞாயிறு பின்னேரம் அலக்சான்டரியாவின் அல் குவெத் இப்ராஹிம் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. 2011 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இந்த சதுக்கம் பிரதான தளமாக இருந்தது. அதேபோன்று நஸிர் நகர் மற்றும் தலைநகர் கெய்ரோவின் ஷொப்ரா மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு நிறைவு நிகழ்வை ஒட்டி எகிப்து இராணுவம் ஏற்கனவே நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியதோடு செயற்பாட்டாளர்களை முடக்குவதற்காக வீடுகளில் சுற்றுவளைப்பு தேடுதல்களை நடத்தி இருந்தது.
தலைநகர் கெய்ரோவின் மத்தியப் பகுதியில் 2011 மக்கள் போராட்டம் மையம் கொண்டிருந்த தஹ்ரீர் சதுக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கூடுதலாக பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களில் மட்டும், வீதிகளில் இறங்கி போராட திட்டமிட்டுள்ளனர் எனும் சந்தேகத்தின் பேரில், கெய்ரோவில் 5000 வீடுகளில் பாதுகாப்பு படையினர் சோதனைகளை நடத்தியுளனர்.
எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தாஹ் அல் சிசி கடந்த ஞாயிறன்று தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், அரசு 2011 மக்கள் எழுச்சியின் அபிலாஷைகளுக்காக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று வலியுறுத்தினார். எனினும் சிசியின் ஆட்சியில் எகிப்தில் மனித உரிமை மோசமாக மீறப்பட்டிருப்பதோடு நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த உரைக்கு முந்தைய தினம் சிசி, நாட்டின் ஸ்தரத்தன்மைக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். இராணுவத் தளபதியாக இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய சிசி, 2014 இல் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றியீட்டி இருந்தார்.
2011 மக்கள் போராட்டத்தில் பிரதான பங்கு வகித்த ஏப்ரல் 6 முன்னணி தற்போது எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. “நாம் தற்போது எந்தவொரு ஆர்ப்பட்டத்திலும் ஈடுபடப்போவதில்லை ஏனென்றால் அது எந்த பயனும் தராது. மேலும் மக்கள் கொல்லப்படுவதும் சிறைப்பிடிக்கப்படுவதுமே மிச்சம்” என்று அந்த முன்னணியின் பேச்சாளர் அமால் ஷராப் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தில் அமைதியான ஆட்சி மாற்றம் நிகழ்வதாக குறிப்பிட்டபோது முபாரக் காலத்தை விடவும் தற்போதைய சூழல் மோசமாக இருப்பதாக பல செயற்பாட்டாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
2011 மக்கள் எழுச்சி போராட்டத்தில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வாரங்கள் உயிரை பணயம் வைத்து தொடர்ந்து பாரிய ஆர்ப்பட்டத்தை நடத்தி இருந்தனர். இதில் 840க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு 6,500 பேர் காயமடைந்தனர்.
2011 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரும் தற்போது தமது போராட்டம் தோல்வி அடைந்திருப்பதாகவும் நாட்டில் ஒடுக்குமுறைகள் வலுத்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
“முபாரக் காலத்தில் என்றால் தேசிய பாதுகாப்பு விசாரணையின் கீழ் ஒருசில தினங்களுக்கு துன்புறுத்தல்களுக்கு முகம்கோடுக்க வேண்டி வரும். ஆனால் தற்போது கடத்தல்கள், வெறித்தனமான தண்டனைகள் மற்றும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகம்கோடுக்க வேண்டி ஏற்படும்” என்று ஷராப் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 6 முன்னணியினர் மற்றும் ஏனைய மக்கள் போராட்ட தலைவர்களில் சுமார் பாதி அளவானவர்கள் தற்போது சிறை அனுபவிப்பதோடு ஏனையவர் கைதாகும் அபாயத்துடன் உள்ளனர்.
அரபு நாடுகள் என்றும் முஸ்லிம் நாடுகள் என்றும் பேசும் இந்த நாடுகள் உண்மையான இறை வேதம் அல்குரானையும் அதனை உண்மைப்படுத்தும் நபி வழியான அஸ்ஸுன்னாவையும் புறம் தள்ளிவிட்டு தான்தோண்டித்தனமாக வாழ்வதர்க்கு எடுத்த முயற்சிகளால் எது நேரான வழி என்று புரியாமல் தடமாறும் ஒரு நிலைக்கு அரபுலகம் தள்ளப்படுவதோடு பல அபாயகரமான ஆபத்துக்களையும் சந்தித்துள்ளது மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்திய பிரதி பலனாக வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.மனித சமுதாயத்துக்கு வழிகாட்ட வந்த இஸ்லாத்தை ஏற்றிருக்கும் முஸ்லிம்கள் அடுத்தவர்களின் கலாச்சாரத்தை கடனுக்கு வாங்கி இஸ்லாத்துக்குள் நுழைத்து தன்கையாலேயே தனக்கு அழிவை ஏற்ப்படுத்திக்கொண்ட ஒரு அபாக்கியம்தான் தற்கால பிரச்சினை.( உ+ம் அஸ்ஸலாமு அழைக்கும் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று சொல்லுமாறு அழகாக இஸ்லாம் சொல்லித்தருகிறது அதை ஓரம் கட்டிவிட்டு صباح الخير சபாகுல் க்ஹைர் (நல்ல காலை என்று சொல்லும் பழக்கத்தை ஏற்ப்படுத்திக்கொண்டுல்லார்கள் இது சிரிதாக இருந்தாலும் இது போன்ற பல விடயங்கள் அளித்தொளிக்கப்படுகின்றது.அல்குரானும் அஸ்ஸுன்னாவும் புறம் தள்ளப்படும்போது சோதனைகள் அழிவுகள் குழப்பங்கள் வந்துகொண்டே இருக்கும்.
ReplyDelete