"புதிய அரசியலமைப்பு எந்த சமூகத்துக்கும், சிறப்பு முன்னுரிமை வழங்ககூடாது" சுமந்திரன்
புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
”1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்களில் தமிழ் மக்கள் தள்ளிவைக்கப்பட்டனர். இதனால் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட்டது.
இவற்றை நிவர்த்தி செய்வதிலிருந்து புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரிக்கப்படாத நாடு என்ற அடிப்படை சரியாக உணர்த்தப்படாமையால், சுதந்திரத்தின் பின்னர் இன்று வரை நாடு பல்வேறு வேறுபாடுகளை எதிர்கொண்டுள்ளது.
இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரவேண்டும் எனக் செயற்பட்டிருப்பது சிறிலங்காவின் வரலாற்றில் முதல்முறையாகும்.
எமது மக்கள் வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, சமூகப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். நாளாந்தம் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் அவை அவர்களின் அடிப்படைப் பிரச்சினை அல்ல.
சிறுபான்மையாக இருப்பவர்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இதன் மூலமே சகலரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்வார்கள்.
எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பவர்களுக்கும் சமமான அதிகாரத்தை வழங்கக் கூடிய அரசியலமைப்பு ஒன்றே அவசியமானது.
புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக்கூடாது
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்கள மொழி ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களிடத்தில் சரியாக கொண்டு சேர்த்தால் அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
I agree Sumandran. You are the only one make educated speech. Hakeem is rubbish. Other TNA fellows are very narrow minded personnel. Rishard is excellent but he does not have legal background.
ReplyDeleteதமிழ் அரசியல்வாதிகள் தமிழரையும், முஸ்லிம் அரசியல்வாதி முஸ்லிமையும் சிங்கள அரசியல்வாதி சிங்களவரையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல் சம்ஷ்டி மாகாணம், இனத்துக்கென தனி அலகு கோரிக்கைகளின்றி இலங்கையராய் இலங்கை அனைத்தின மக்களையும் பிரதிநிதிதுவம் செய்யும் அரசியல் முதிர்ச்சி வேண்டும். பிரிந்து வாழ்ந்து, பிரித்துப் பார்த்து பழகிவிட்ட நாங்கள் திருந்தி வாழ வேண்டும்.
ReplyDeleteயாதும் ஊரே யாவரும் கேளீர் என்போம் பிரிவினை(சமஷ்டி)கேட்போம்,
தமிழர் நாம் சமஷ்டி கேட்போம் முஸ்லிம் அவர் கிழக்கு வேறு என்றால் ஒத்துக்கொள்ள மாட்டோம்.
ஒற்றுமை எனும் கயிரு என்போம் சமூக நல்லிணக்கமென்போம் தனி அலகு கேட்போம்,
மட்டையன் என்போம், பனங்கொட்டை என்போம், தோட்டக்காட்டான் என்போம், சோனி என்போம், தமிழன் என்போம், வந்தான்வருத்தான் என்போம், ஆனால் பேரினம் மட்டும் இனத்துவேஷம் என்போம். அவர்கள் இடமெல்லாம் நாம் போய் வருவோம், நம்மிடம் வந்தால் உளவு பார்ப்போம் துரத்தப்பார்ப்போம். பேரினத்துவேஷம் கால் பங்கு என்றால் நம்மில் துவேஷமில்லா அரைக்கால் பங்கேனும் தேட முடியுமா?
மஹிந்த நேசர்களும் ஞானசாரரும் அவரின் நேசர்களும் நம்மைப்போலவே துவேஷிகள்.
100% true brother
Deleteசுமேந்திரனும் அந்த TNA யின் குறுகிய மனப்பான்மைக்குள்தான் நின்று பேசுகிறார் என்பது அவரது "1972, 1978 அரசியல் யாப்பின்படி 'தமிழ்மக்கள்' தள்ளி வைக்கப்பட்டார்கள்" என்ற கூற்றின்மூலமே தெளிவாக தெரிகிறது. இதில் அவர் மறைமுகமாக "முஸ்லிம்கள் இன்னொரு இனம் இல்லை" என்பதையோ, அல்லது "முஸ்லிம்களும் 1972, 1978 ஆம் யாப்புகளின்படி முழு நன்மைகள் பெற்றார்கள், தமிழர்கள் மட்டும்தான் பெறவில்லை" என்பதையோ அல்லது "முஸ்லிம்களை அரசியல், அதிகார பங்கீட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டியதில்லை" என்பதையோ சொல்லவருகிறார் என்பதுதான் யதார்த்தம்.
ReplyDeleteஅவர் சென்ற வருட இறுதியில், வடக்கு முஸ்லிம்கள் சார்பாக தெரிவித்த நியாயமான, உண்மையான கருத்திற்காக முஸ்லிம்கள் அவரை இல்லையென்ற அளவு (ஏனெனில் இதுவரை ஈரமில்லாத உலர்ந்த மரத்தின் ஒரு ஓரத்தில், ஒரு துளிர் விட்டதைக்கண்டு சந்தோசப்படுவதுபோல்) சந்தோசத்தில் நன்றி செலுத்தினோம். ஆனால் அதேவருட இறுதியில், அவர் சவூதியை விமர்சிப்பதாக சொல்லிக்கொண்டு இஸ்லாமிய சட்டத்திலேயே கைவைத்துவிட்டதை கண்டபோது, நொந்துபோனோம். அந்நிலையில் இப்படியான கருத்துக்கள், அவர் பழைய இடத்திற்கே சென்று விட்டார் என்றே எண்ணத்தோன்றுகிறது!
அட்டைக்கும் மெத்தைக்கும் ஒருபோதும் ஒத்துவராது......நாடக மேடையில் அவர்கள் நடிகர்கள் நாம்பார்வையாளர்கள் அவ்வலவுதான்
ReplyDelete