பிரமிட் முறைமை தொடர்பில், விசாரணை செய்ய உத்தரவு
பிரமிட் முறைமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு நீதி அமைச்சர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு
சட்டவிரோதமான முறையில் பிரமிட் முறையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களின் பணம் மற்றும் சேமிப்பினை முதலீடு செய்யும் சட்டவிரோதமான நிதி பிரமிட் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குளோபல் லைப் ஸ்டைல் லங்கா என்ற பெயரில் இந்த சட்டவிரோத பிரமிட் நிதிக் கொடுக்கல் வாங்கல் நிறுவனம் இயங்கி வருவதாக நீதி அமைச்சர் என்ற ரீதியில் தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு தாம் பணிப்புரை வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரமிட் நிதி கொடுக்கல் வாங்கல் முறைமையை அமுல்படுத்தும் நிறுவனங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு அல்லது பல மடங்கு பணம் குறித்த காலத்தின் பின்னர் கிடைக்கும் என மக்களை பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Post a Comment