ரின் மீன் விலையில், மாற்றம் ஏற்படாது - நிதியமைச்சர்
ரின் மீன் விலையில் எவ்வித மாற்றம் ஏற்படாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (28) தகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ரின் மீனுக்கான வரி, கிலோவுக்கு ரூபா 100 இனால் அதிகரிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்ததாக வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தான் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Post a Comment