Header Ads



உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களே, கட்டாருக்கு பறக்க ஆசைப்படாதீர்கள்...!

-Safwan Basheer-

உயர்தரப் பரீட்சை எழுதிய ஒரு 
மாணவர் நேற்றுத் தொலைபேசி 
மூலம் தொடர்பு கொண்டு கட்டார்
வருவது குறித்து தீவிரமாக 
வசாரித்தார்.

என்னமாதிரி கோர்ஸ் செஞ்சா நல்ல
சம்பளம் எடுக்க ஏலும்டு கேட்டாரு.

மூட்ட புடிக்ககிறதுக்கும், வெயில்ர 
காய்ரதுக்கும் ஏதாவது கோர்ஸ இருந்த செஞ்சிட்டு வாங்க என்றுதான் சொல்ல நினைத்தது.

எமது இளைஞர்கள் திசை மாறும் 
இடம் இதுதான்.

உயர்தரப் பரீட்சையில் எதிர்பார்த்த
பெறுபேறு கிடைக்காவிட்டால்
ஏதாவது ஒரு கோர்ஸ் செய்துவிட்டு
வெளிநாடு வருவது.

எனது வெளிநாட்டு அனுபவத்தில்
சொல்கின்றேன் ஒரு சரியான துறை சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு
டிகிரி இல்லாமல் இங்கே வந்து
ஒன்றும் செய்யமுடியாது.

தனியார் நிறுவனங்களின் ஆறுமாத
ஒருவருட கோர்ஸ்களை செய்துவிட்டு இங்கே வந்து 
உங்கள் எதிர்காலத்தை வீனாக்கிவிடாதீர்கள்

உயர்தரப் பரீட்சையை மூன்று முறை பாடசாலை மூலம் எழுத முடியும் குறைந்தது இந்த மூன்று
முறையேனும் உங்கள் இலக்கை
அடையும்வரை முயற்சியுங்கள்

இலங்கையைப் பொருத்தவரையில்
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரச பல்கழைக் 
கலகத்தில் ஒரு பட்டப் படிப்பை 
பூர்த்தி செய்வதுதான் ஒரு இளைஞனுக்கு யுவதிக்கு இருக்கும் மிகச் சிறந்ததும் சரியானதுமான தெரிவாகும்

இந்த அருமையான வாயப்பை விட்டு விட்டு ஏதாவது கோர்ஸ்
செய்யப் போய் காலத்தையும்
பணத்தையும் எதிர்காலத்தையும்
நீங்களே கேள்விக்குறியாக்கிவிடாதீர்கள்

வெளிநாட்டுக்கு நமது இளைஞர்கள் 
வரவேண்டும் ஆனால் துறைசார் நிபுனர்களாக வரவேண்டும்

அங்கீகாரத்தோடும் அதிகாரத்தோடும் 
வேலை செய்ய வேண்டும் அடிமைகளாக அல்ல

இங்கே தகுதி இல்லாமல் வருவதவைிட நாட்டில் ஏதாவது
ஒரு தொழில் செய்வது எவ்வளவோ
நல்லது.

அப்படி அவசரத்துல,ஆறு மாச கோர்ஸ் முடிச்சிட்டு வாரவங்கதன் இங்க வந்து வெளிநாட்டு வாழ்க்கைய பத்தி கவித எழுதுரதும்,
பாட்டு படிக்கிறதும்.

எனவே நாங்க தகுதி இல்லாம
இங்க வந்துட்டு அரபிகளதை்
தூற்றுவதிலும், மலையாளிகளைப்
பார்த்து பொறாமைப் படுவதிலும்
எந்த அர்த்தமும் இல்லை.

கவிஞர் வைரமுத்து தனது "சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்" என்ற
நூலில் ஓரிடத்தில் இப்படிச் சொல்வார்.

"ஒரு இளைஞன் தனது பதினேழு
வயதிற்கும் இருபத்தொரு வயதிற்கும் இடைப்பட்ட 
காலப் பகுதிக்குள் தனது
திசை எது என்பதை தீர்மாணித்துவிட வேண்டும்.

அவன் அந்தக் காலத்தை தவற 
விட்டால் எங்கு சென்றாலும்
சுவரில் மோதிய பந்தைப் போல
போன வேகத்திலேயே திரும்பி
வரவேண்டிவரும்"

எனவே உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் காலம்
ஒரு இளைஞனி்ன்,யுவதியின்
வாழ்க்கையைத் தீர்மாணிக்கும் மிக
முக்கியமான காலம். இந்தக் காலத்தில் சில சில்லரைத்தனமான
ஆசைகளுக்காக எதிர்காலத்துக்கான ஒரு பிக்ஸ் டிபோசிட்டை இழந்துவிடாதீர்கள்.

8 comments:

  1. எனவே நாங்க தகுதி இல்லாம
    இங்க வந்துட்டு அரபிகளதை்
    தூற்றுவதிலும், மலையாளிகளைப்
    பார்த்து பொறாமைப் படுவதிலும்
    எந்த அர்த்தமும் இல்லை.

    ReplyDelete
  2. Nanrikal Ungalin Anupave Aripuraikku

    ReplyDelete
  3. Well Said Brother.Some time we can get big positions & salary but without a Degree certificate its very difficult.You have to be is same position for long time.

    ReplyDelete
  4. U r correct 100%, Education is the main factor to stand on ur one feet

    ReplyDelete
  5. Good bro...
    தாம் பெற்ற துன்பம் யாரும் பெற வேண்டாம்!

    ReplyDelete
  6. Well said bro, working abroad is like gambling. You never want to loose it and you never win it either. Don't go after cheaters - Travel Agencies..Don't be fooled by their advertisements and interviews...Don't look at someone who is working abroad and think that you can also do the same. Almighty Allah knows what is best for you!

    ReplyDelete

Powered by Blogger.