"பரீட்சைகளுக்கு பின் நான்"
-அபூஉமர் அன்வாரி மதனி-
பரீட்சை பெறு பேறுகள் வெளியாகியுள்ள இவ்வேளையில், சித்தியடைந்தோருக்கும் பரீட்சை எழுதியோருக்கும் பாராட்டுக்கள்.இப்பெறுபேறுகள் கல்வியின் முடிவுமல்ல, இதன் தோழ்வி ஒரு வாழ்க்கை தோழ்வியும் அல்ல.மாறாக வெற்றியடைந்தோர் இன்னும் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ரப்பம்.தோழ்வியுற்றோர் தமது பிழையை உணர்ந்து அதிக அக்கரையுடன் வீறு நடை போடும் தருணம்.மாறாக பெறுமைக்கும்,தன்னை மாய்த்துக்கொள்வதற்குமான ஒரு போராட்டமல்ல.
இன்று அதிமானோர் நிணைப்பது போல் உயர்த்தரப்பரீட்சையின் தோழ்வி எனது வாழ்வை சூனியமாக்கிவிட்டது என்பதல்ல.இதை விடுத்து தன்னை வாழ்க்கைக்கு தயார் படுத்தும் ஒரு தருணமாக இருக்க வேண்டும்.பல்கலைக்கழகம் அனைவருக்கும் சொந்தம் இருப்பினும் அதில் அனைவருக்கும் நுழைய முடியாது திறமைசாலிகளுக்கு மாத்திரம் இடத்தினை ஒதுக்கியுள்ளது அது.கல்வி என்பது அனைவருக்கும் உரித்தானது அதை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.
எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுகொள்ள முடியும்.இதற்கு தேவை ஆசையும்,தேடலுமாகும். கற்கை வழிகள் அதிகம் அதிகம் காணப்படுகின்றன. அதில் சிறந்ததை தெரிவு செய்து திறன்பட கற்பது காலத்தின் தேவை.இதை விடுத்து தன்நம்பிக்கையை இழந்து விடாது உலகம் பரந்து விரிந்தது என மனங்களை திறந்து விட வேண்டும்.தாய்நாட்டில் இல்லையா வெளிநாட்டில் படிப்பு.பல்கலைக்கழகம் இல்லையா வீட்டில் அமர்ந்த படி படிப்பு.படிப்பே இல்லையா தனது திறமை என்ன என உணர்ந்து அதை அபிவிருத்தி செய்து தனக்கும் சமூகத்துக்கும் பிரயோசனமானவனாக வாழவேண்டும்.உலகத்தில் எதுவும் வீணாக படைக்கப்படவில்லை.ஆற்றல்கள்,திறமைகள் வேறுபடுகின்றன.
I like it . Well said Sir.
ReplyDelete