Header Ads



மைத்திரி ஆட்சிப் பொறுப்பினை ஏற்று ஓராண்டு, பான் கீ மூன் வாழ்த்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு ஓராண்டு பூர்த்தியாவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலையான சமாதானத்தையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் காண்பித்து வரும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியை ஏற்படுத்த அரசாங்கம் காண்பித்து வரும் சிரத்தை வரவேற்கப்பட வேண்டியத என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைக்கால நீதிப்பொறிமுறைமை ஒன்றின் மூலம் கடந்த காலப்பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்ந்தும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத் திருத்தம் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.