கல்முனை முஸ்லிம்களின் ஊர், என்று கூறப்படுவதில் என்ன தவறு..?
-Mufaris M. Haniffa-
போலியான தகவல்களை உண்மையானவையாக சித்தரிக்க முயலும் இனவாதிகளின் நோக்கம் நிறைவேற கல்முனை வாழ் தமிழ் முஸ்லிம் சமூகம் அனுமதிக்கக்கூடாது.
கல்முனை நகர அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டு வயல் நிலங்கள் சுவீகரிக்கப்படவிருப்பது யாவரும் அறிந்த விடையமே. அரசியல் இலாபம் தேடமுயலும் சில குறுகிய நோக்கம் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் அப்பட்டமான போலியான தகவல்களை ஊடகங்களினூடாகவும், வெளிப்பிரதேசங்களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியும் கல்முனையில் தமிழ், முஸ்லிம் உறவுக்கு சவால் விடுத்து வருகின்றனர். இனவாதிகளின் இத்தகைய வங்குரோத்து செயல்களை கல்முனையான்ஸ் குழுமம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் எம்.பி.க்கள், ஹென்றி மஹேந்திரன் போன்ற தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களின் கூற்றின் பிரகாரம் கல்முனையில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வசிப்பதாகவும், வயல்காணிகளும் அவர்களுக்கே அதிகமாக இருப்பதாகவும் கூறியிருப்பதானது குருடர்கள் சந்திரனை சூரியன் என்று கூறுவது போலானது. கல்முனையில் அண்ணளவாக முஸ்லிம்கள் 70 வீதமாகவும், தமிழர்கள் 30 வீதமாகவும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் அதே போன்று கல்முனையிலுள்ள மொத்த வயல்காணிகளில் 80 வீதத்திற்கு மேற்பட்டவைகள் முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் என்பதும் ஒரு கல்முனைத் தமிழ்த்தாயின் வயிற்றிலே பிறக்கவிருக்கின்ற குழந்தைக்கு கூட தெரிந்த விடயம் இந்த இனவாதிகளுக்கு தெரியாமலிருப்பது ஒரு கேலிக்கூத்தான விடையமே ஆகும்.
கல்முனை நகரத்தில் அபிவிருத்தித் தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய அரச காணிகள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. இதன்காரணமாகவே மேற்குப்புறத்தில் உள்ள சதுப்பு நிலங்களை சுவீகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கல்முனைப்பிரதேசத்தின் முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசங்களின் சனத்தொகை அடர்த்தி அதிகமாகும். சூழல் சுகாதார நியமங்களையும் விஞ்சிய அளவில் இவ்வடர்த்தி காணப்படுவதாலும், பாதைகள் நெரிசலடைந்தும், கழிவு நீர் முகாமைத்துவப் பொறித்தொகுதி இல்லாததாலும் எதிர்கால சனத்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப தற்போது காணப்படும் குடியிருப்புப்பிரதேசத்தில் அடுக்கு மாடி வீட்டுத்திட்டங்களை அமைப்பது கடினமாகும். எனவே வருங்காலத்தில் ஏற்படும் நிலப்பற்றாக் குறையைக் கருதியும், அதிகரித்த சனத்தொகைக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் புதிய குடியிருப்புப் பிரதேசங்களை அடையாளம் காணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மேற்குறித்த காரணிகளின் அடிப்படையில் சுனாமிக்குப் பிறகு ஆய்வை மேற்கொண்ட ஜெய்க்கா நிறுவனம் கல்முனையின் நீண்டு நிலைக்கக் கூடிய அபிவிருத்திக்கு மேற்குப்புறத்தில் காணிகளை நிரப்பவேண்டிய கட்டயாயத்தினை தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொறியியல் துறையில் விற்பன்னர்களான ஜப்பானியர்கள் சதுப்பு நிலங்களை நிரப்பும்போது தேங்கப்போகும் வெள்ளப்பெருக்கை ஈடுசெய்யக்கூடியவகையில் என்னென்ன வழிமுறைகளைக் கையாளவேண்டும் என்று ஏலவே அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் .எனவே புதிய நகரத்திட்டத்தினால் குடியிருப்புக்கள் தாழும் என்னும் கூற்று முற்றிலும் அடிப்படையற்றதாகும்.
மேற்படி திட்டத்தின் விபரங்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில், தங்களுக்கு ஏதும் சந்தேகங்கள், ஐயப்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை சுமூகமான முறையில் பேசித்தீர்ப்பதற்குரிய ஆரம்ப கட்ட கலந்தாலோசனைகள் மக்கள் பிரதிநிதிகளோடு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஒருதலைப்பட்சமாக தமிழர்களின் பூர்வவீகத்தை அழிக்கும்செயல் என சில விஷமச் சக்திகள் கூக்குரல் இடுவது இனப்பிரச்சினை இருந்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய எத்தனித்த காலத்தில் கல்முனை நகரத்திலிருந்த முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஆயுதக்கலாச்சாரமும், பயங்கரவாதப் போக்கும் இன்னும் எஞ்சியுள்ளதா என எண்ணத்தோன்றுகிறது.
கல்முனையின் எல்லையாக வடக்கில் தாழவட்டான் சந்தி வீதியிலிருந்து தெற்கில் சாஹிறா கல்லூரி வீதி வரைக்கும் கல்முனை வட்டாரப்பிரிவு ஏற்படுத்தப்பட்ட 1947 ம் ஆண்டு முதல் இன்று வரை நடைமுறையிலுள்ளது. இதுவே சட்டபூர்வமான எல்லை. இதனை யாரும் இன்று வரை மாற்றவும் இல்லை, மாற்ற அனுமதிக்கப் போவதுமில்லை என்பதனை திட்டவட்டமாகக் கூறிக்கொள்வதுடன் இனிமேல் இத்தகைய சமூகவிரோத எண்ணங்கொண்ட சில்லறை அரசியல்வாதிகள் கல்முனை தமிழ் முஸ்லிம் உறவிற்குள் மூக்கை நுழைக்க வராது தங்களது எல்லைகளுக்குள்ளேயே முடங்கி விடவேண்டும் என எச்சரிக்கையும் விடுக்க விரும்புகிறோம்.
தமிழ் மக்களின் விருப்பம் கோராது கல்முனை நகர அபிவிருத்தியை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுக்கவிருக்கிறார்கள் என்று இனவாத அரசியல்வாதிகள் கூறியிருப்பதானது அடிப்படைக்கு புறம்பானதொன்றாகும். ஏனெனில் அபிவிருத்தி என்பது அரசாங்கம் தீர்மானிக்கம் செயலாகும். இதற்கு மக்களின் விருப்பு வெறுப்பை அறிந்தபின் அதனைத் தீர்மானிக்கும் ஒரு மரபு முறையோ அல்லது சட்ட வழிமுறையோ இல்லை. அவ்வாறு அபிவிருத்தி மேற்கொண்ட வரலாறுகளுமில்லை. மக்கள் வாழும் பிரதேசங்களில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டுமானால் காணிசுவீகரிப்பு, தொழில் பாதிப்பு, சூழல் பாதிப்பு போன்ற தவிர்க்கமுடியாத விளைவுகள் ஏற்படலாம். ஒரு அபிவிருத்தியினை மேற்கொள்ள முனைகின்ற போது அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதக விளைவுகளை ஆராய்ந்து சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய ஆபத்து இருக்குமாயின் மத்திய சூழல் அதிகாரசபையினால் மக்கள் கருத்துக்கோரலுக்கு விடப்படுவதே மரபுரீதியாகவும், சட்டரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாகும். இதைவிடவும் கேலிக்கூத்தான அவர்களது கூற்று என்னவென்றால் இவ் அபிவிருத்தியினால் தமிழ் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கலாமாம், தேவையான வடிகான்களையமைத்து ஒரு துளித்தண்ணிகூட தேங்காமல்; 1000 ற்கும் மேற்பட்ட ஏக்கர வயல்காணிகள் நிரப்பப்பட்டு குடியேற்றங்களை ஏற்படுத்திய சுனாமியின் பின்னரான அண்மைய வரலாற்று உண்மை; தமிழ் பிரதேசங்களிலேயே உள்ளது.
மேலும் இவ் அபிவிருத்தியின் மூலம் மு.கா.தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் கல்முனையை முஸ்லிம்களின் ஊர் என பறைசாற்ற முயல்கிறார். இதில் என்ன சந்தேகம்? தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் யாழ்ப்பாணம், கிழிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு போன்றவைகள் தமிழர்களின் ஊர் என்று கூறப்பட முடியுமாக இருந்தால் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் கல்முனை முஸ்லிம்களின் ஊர் என்று கூறப்படுவதில் என்ன தவறு? அபிவிருத்தி நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.
தமிழ் அரசியல் தலைமைகள் அவர்களது கட்சி உறுப்பினர்களின் போலியான சமூக விரோத போக்கினை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதானது குறிப்பாக இனவாதத்தைத் தூண்டும் வகையிலான வெறுப்பேற்றும் பேச்சுக்களை சில சில்லறை அரசியல்வாதிகள் முன்வைப்பதை தடுக்க முன்வராமல் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது. இவ்வாறான இனவாதப்பேச்சுக்கள் தொடர்ச்சியாக கீழ்மட்ட தமிழ் அரசியல்வாதிகளால் பேசப்பட்டு வருகின்றமையானது உன்னிப்பாக உற்று நோக்க வேண்டியவிடயமாவே உள்ளது.
மேலும், இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ் அரசியல்வாதிகள் முன்வைத்து போலி ஆவணமாக மாற்றும் முஸ்லிம் விரோத கைங்கரியங்களில் ஈடுபடுகின்ற போது, முஸ்லிம் அரசியல் தலைமைகள் சரியான தரவுகளைக்கொண்ட அறிக்கைகளை ஊடகங்களில் பிரசுரித்து தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று ஆதாரமற்றது என்று நிரூபிக்காமல் வேடிக்கை பார்ப்பதானது கவலையை தோற்றுவிக்கின்றது.
ஆகவே, கல்முனையான்ஸ் குழுமம் எமது கல்முனை மாநகரின் நலன்களையும் தமிழ், முஸ்லிம் உறவையும் பாதுகாக்க தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும், சிவில் சமூகத்தாரினதும் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கின்றது.
கல்முனையில் முஸ்லிம்கள் அதிகம் என்பது எல்லோரும் அறிந்த விடயம். முஸ்லிம்களிின் சனத்தொகை வளர்ச்சி வீதம் ஏனைய சமூகங்களை விட அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது ஆனால் அதிகரித்த சனத்தொகையை காரணமாக காட்டி தமிழர்களின் காண்ிகள் பறித்தெடுக்க படுவது எந்தவொரு நியாயமும் இல்லாத விடயம்
ReplyDeleteஇதில் இருக்கும் உண்மையை ஏற்க மறுக்கும் காரணம் தான் புரியவில்லை
காட்டிக்கொடுப்பவனும் கூட்டிக்கொடுப்பவனும் இருசமூகத்தினுல்லும் இருந்தால் இவ்வாரான பிரட்சனைகள் தொடரத்தான் செய்யும் விடியவிடிய ராமாயனம் பேசிக்கொன்டிருந்தால் உரின் அபிவிருத்தி அப்பம் சுடும் கதையாகவே இருக்கும் என்பதே உன்மை இன்ரைய காலகட்டம் நாட்டின் பலபகுதிகலும் அபிவிருத்திகலையே நாடிநிற்கும் போது தேடிவருவதை தூரவிரட்டிவிட்டு பின் காலைபிடிப்பதற்கு சமனாகிவிடும் இருதரப்பும் பேசிமுடிவு செய்வது சிறந்தவிடயம்
ReplyDelete