"எழுத்துப் பிழை" முஸ்லிம் மாணவரிடம் போலீஸ் விசாரணை
பிரிட்டனில் ஆங்கில வகுப்பில் எழுத்துப் பிழை காரணமாக "பயங்கரவாத வீடு' என்று எழுதிய முஸ்லிம் மாணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அந்த நாட்டின் லாங்கஷர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் அந்த மாணவர், ஆங்கில வகுப்பில் "டெர்ரேஸ்டு ஹவுஸ்' (மாடி வீடு) வீடு என்பதற்குப் பதிலாக, "டெர்ரரிஸ்டு ஹவுஸ்' (பயங்கரவாத வீடு) என எழுத்துப் பிழையுடன் எழுதியதைத் தொடர்ந்து, போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த மாணவரின் இல்லத்துக்குச் சென்று, அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், அந்த இல்லத்திலிருந்து கணினியிலும் ஆய்வு செய்தனர்.
எனினும், அந்த இல்லத்தில் சந்தேகத்துக்கிடமான எந்த அம்சமும் இடம் பெறவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
ivanukku lusa
ReplyDeleteஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்
ReplyDelete