Header Ads



மயில் மாளிகையை மகிந்த ராஜபக்ச, விரும்புவதன் மர்மம் என்ன

 -தமிழில் Gtn-

ஜோதிடம் மற்றும் அமானுஸ்ய சக்திகள் மீதான ஆர்வம் என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை பொறுத்தவரை இரட்டைமுனை கத்திகளாகவே காணப்பட்டுள்ளன. அவற்றின் மீதான நம்பிக்கை அவரிற்குபாரிய வெற்றிகளை வழங்கிய அதேவேளை அதலபாதளத்திலும் தள்ளியுள்ளன.

எனினும் ஜோதிடர் ஓருவரின் எதிர்வுகூறல் காரணமாக தனக்கு மிகவும் விருப்பமான பெலவத்தை மயில்மாளிகையில் குடியேறுவதற்கான மகிந்தராஜபக்சவின் விருப்பத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.அந்த மாளிகையில் குடியேறினால் முன்னாள் ஜனாதிபதியின் அரசியல்எதிர்காலம் மீண்டும் உச்சத்திற்கு செல்லும் இதனால் அந்த வீட்டை மீண்டும் அவரிடமிருந்து பெறமுடியாது என உரிமையாளரிற்கு ஜோதிடர் ஓருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குறிப்பிட்ட மாளிகையின் உரிமையாளர் அந்த பங்களாவை மகிந்தராஜபக்ச குடியேற அனுமதிப்பதற்கு தயங்குகின்றார்.  பிரபலவர்த்தகரும்,நைஜீரீயாவிற்கான முன்னாள் தூதுவருமான ஏஎஸ்பி லியனகேயே பெலவத்தையில் உள்ள சர்ச்சைக்குரிய மயில் மாளிகையின் உரிமையாளர். அந்த மாளிகையில் குடியேறினால் முன்னாள் ஜனாதிபதியின் அரசியல்எதிர்காலம் மீண்டும் உச்சத்திற்கு செல்லும் இதனால் அந்த வீட்டை மீண்டும் அவரிடமிருந்து பெறமுடியாது ஜோதிடர் அவரிற்கே தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக அவர் முன்னர் வாக்குறுதியளித்தபடிஅந்த மாளிகையை மகிந்தராஜபக்சவிற்கு வழங்குவதற்கு தயங்குகின்றார். இந்த விடயத்தில் அந்த வர்த்தகர்தர்மசங்கடமான நிலையில் காணப்படுகின்றார், தன்னை நைஜீரியாவிற்கான தூதுவராக்கிய மகிந்தராஜபக்சவிற்கு அவர் நன்றிக்கடன்செலுத்தவேண்டிய நிலையிலுள்ள அதேவேளை18 அறை ஆடம்பரபங்களாவை மகிந்தவிற்கு வழங்கும் முயற்சிகளை கைவிடுமாறு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.நான் அதனை விற்றால் என்னை விவகாரத்து செய்துவிடுவதாக எனது மனைவி தெரிவித்துள்ளார் என  குறிப்பிட்டுள்ளார்.

ராஷபக்ச போன்று ஏஎஸ்பி லியனகேயும் ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர்,அவர் தனது மாளிகையை மகிந்தவிற்கு வாடகைக்குவிட தீர்மானித்த வேளை மகிந்த அந்தமாளிகையில் காணப்பட்ட நீச்சல்குளத்தை மண்ணால்நிரப்பவேண்டும் என விரும்பினார், வீட்டின் மேற்கு பகுதியில்நீர்நிலையேதாவது காணப்பட்டால் அது அந்தவீட்டில் குடியிருப்பவர்களின் அதிகாரத்தை உறிஞ்சியிழுத்துவிடும் என கேரளஜோதிடர் ஓருவர் தெரிவித்தமையே இதற்கு காரணம்,நானும் இதனை நம்பியதால் நீச்சல்தடாகத்தை மண்ணால் நிரப்பினேன் என ஏஎஸ்பி லியனகே எக்ஸ்பிரசிற்கு தெரிவித்தார்.

இதேவேளை  உள்ளுர் தொலைக்காட்சியொன்று குறிப்பிட்டபங்களாவின் மணலால்நிரப்பப்பட் நீச்சல் தடாகத்தின்கீழ் முன்னாள் ஜனாதிபதியின் பெருமளவு நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டுவருகின்றது, மண்நிரப்பட்ட வேளை நான் இருக்கவில்லை, ஆனால் நகைகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கவில்லை எனநான் நிச்சயமாக நம்புகின்றேன்.

இந்தவிடயத்தில்  வெளிப்படையாகயிருப்பதற்காக நான் பொலிஸாரை அந்த மண்ணை அகற்றுமாறு கோரியுள்ளேன்,விசாரணைகளை  என்சார்பில் முன்னெடுக்குமாறும்  கேட்டுள்ளேன் எனஏஎஸ்பி லியனகே தெரிவித்தார், நான் அனைத்து தரப்பினதும் அரசியல் அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளேன்என அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. What is going on that palace? may be some moracle availble there!!!!!

    ReplyDelete

Powered by Blogger.