Header Ads



நியூசிலாந்து கரன்சி இல்லை, அப்ரிடியை காப்பாற்றிய ரசிகர் (வீடியோ)

நியூசிலாந்துக்கு சென்ற பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் அப்ரிடிக்கு தர்மசங்கட நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் அப்ரிடி சக வீரர் அகமது ஷேசாத் உடன் சேர்ந்து ஆக்லாந்து விமான நிலைய மெக்டொனால்டு கடையில் சாப்பிடுவதற்காக ஆர்டர் செய்தார்.

அப்போது அவர்களிடம் நியூசிலாந்து கரன்சி இல்லை. இருவரும் அமெரிக்க டொலர்களே வைத்திருந்தனர். ஆனால், மெக்டொனால்டு நிறுவனமோ அமெரிக்க டொலரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனை பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர் வாகாஸ் நவீத் என்பவர் அவர்களுக்கு பதிலாக பணத்தை கட்டினார். இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இது பற்றி அப்ரிடி கூறுகையில், நாங்கள் அமெரிக்க டொலரை நியூசிலாந்து டொலராக மாற்ற மறந்து விட்டோம்.

ஆனால் எங்களுக்கு பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தான் எங்களுக்குப் பதிலாக பணத்தைக் கட்டி, எங்களை நியூசிலாந்திற்கு வரவேற்றுள்ளார்.

அதேசமயம் ஹொட்டலில் நடந்த சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, ஊடகம் மூலம் வெளியிட்டது சற்று வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். (வீடியோ

No comments

Powered by Blogger.