Header Ads



முகவரியற்றுபோகும் ஐக்கிய தேசிய கட்சி..!

-Kinniyan-

சுதந்திரத்துக்கு பின் இருந்து இன்று வரைகிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக காணப்படுவது திருகோணமலையே. அதிலும் குறிப்பாக கிண்ணியா பிரதேசமே ஐக்கிய தேசிய கட்சியின் மையபுள்ளியாகும். மர்ஹூம் அபூபக்கர், மர்ஹூம் MEH முகம்மது அலி , மர்ஹூம் MEH மஹரூப், அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹரூப் என வரிசையாக கிண்ணியா ஐக்கியதேசிய கட்சி சார்பாக உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்று இம்மாவட்டத்தில் தோன்றியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் குழப்ப நிலை சம்மந்தமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும் மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் கடமையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதே இவ்வரசியல் குழப்ப நிலைக்கு காரணமாகும் . இந்நியமனத்தின் பின்பு இதுவரைக்கும் இவர் ஐக்கிய தேசிய கட்சியில் வகிக்கும் பதவிகளை ராஜனாமா செய்ததாகவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியினால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ  தகவலில்லை.

அதிலும் குறிப்பாக கடந்த சனிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசிம் தலைமையில் தம்பலகாமத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட இவர் அன்று மாலை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் புல்மோட்டையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டத்தில் கலந்துகொண்டது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பாரிய குழப்ப நிலை ஒன்றை ஏற்படுத்தியிருப்பதை அவதானி க்க முடிகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் இந்த அசமந்த போக்கு இ ஏனைய கட்சிகள் உள்ளூரட்ட்சி தேர்தலை மையப்படுத்தி மேற்கொண்டுவரும் செயல் திட்டங்கள் என்பன திருகோணமலையில் ஐக்கிய தேசிய கட்சியின் இருப்பை இன்று கேள்விக்குறியாக்கியுள்ளன.

திருகோணமலை மாவட்ட கட்சி நடவடிக்கைகளில் ஐக்கிய தேசிய கட்சியால் கடந்த காலங்களில் காட்டிய இந்த அசமந்த போக்கே அன்று திருகோணமலையில் முஸ்லிம் காங்கிஸின் வளர்ச்சியை  தூண்டியது.திருகோணமலையில் முஸ்லிம்  காங்கிரஸ்  1980 பிற்பகுதிகளில் கால் பதித்திருந்தாலும் 2000 ஆம் ஆண்டே அவர்களால் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெறமுடிந்தது. 

இதற்கு முக்கிய காரணமாக இருவரின் திடீர் மரணங்களை குறுப்பிடலாம் . ஒன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பாக தொடர்ச்சியாக 20 வருடங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த முன்னால் இராஜாங்க அமைச்சர் MEH மஹரூப் , காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் M.S தவ்பீகின் சகோதரர் வைதுல்லாஹ். 

M.E.H மஹரூப் அவர்களின் மக்கள் செல்வாக்கை தாண்டி காங்கிரசுக்கு தனது செல்வாக்கை திருமலையில் உறுதி செய்வது எட்டாக்கனியாகவே இருந்தது.தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட பல முக்கியஸ்தர்களை முன்னிலைப்படுத்தி மர்ஹூம்  அஸ்ரப் அவர்கள் நிகழ்த்திய அரசியல் காய்நகர்த்தல்கள் ஒன்றும் மஹரூப் அவர்களின் மரணம் வரை பலிக்கவில்லை.

மஹரூப் அவர்களின் மரணத்தை தொடர்ந்து திருமலையில் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்துக்கு வைத்துல்லாஹ் அவர்களை முன்னிலை படுத்தி அஸ்ரப் அவர்கள் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு ஓரளவு வெற்றிபெற்றார் இருந்தும் தேர்தல் காலப்பகுதியில் ஏற்பட்ட வைதுல்லவின் திடீர் மரணம், இதனால் ஏற்பட்ட அனுதாப அலை என்பன யாரும் ஏன் அவரே எதிர்பாராத அரசியல் பிரவேசம் மேற்கொண்ட தவ்பீகை முஸ்லிம் காங்கிரசின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக்கியது

பின்  இல் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சியின் முதுகிலே தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. 2001,2016 ஆகிய காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியால் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியலை திருகோணமலைக்கு வழங்கியதன் மூலம் தமது இருப்பை பாதுகாத்து வருகின்றது. இம்முறை திருமலைக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டற்கான  ஊடகங்களில் பேசப்படாத முக்கிய காரணம் அப்துல்லாஹ மஹ்ரூபுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் வழங்கப்பட்டதாகும். அப்துல்லா மஹ்ரூப் மூலம் ரிஷாத் பதியுதீன் மேற்கொள்ளவுள்ள செயற்திட்டங்களை எதிர்கொள்ள காங்கிரஸ் சார்பாக அதிகாரமுள்ள ஒருவரின் தேவை உணரப்பட்டதே இதற்கான முக்கிய காரணமாகும்.

தற்போது காங்கிரசின் பாணியிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தமது கட்சியை வளர்க்க ஐக்கிய தேசிய கட்சியின் முதுகில் பயணம் செய்யத்தொடங்கியுள்ளது. அதிலும் இம்முறை தேர்தல் மேடைகளில்  அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் தன்னை முற்று முழுதாக ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் என்று அறிமுகம் செய்தே வாக்குகோரியிருந்தார்.தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவுடன் கேட்பதாக அவர் காட்டிக்கொள்ளவே இல்லை.இவ்வாறு வெளிப்படையாக கூறியிருந்தால் அவரின் பாராளுமன்ற தெரிவு கேள்விக்குறியாகியிறுக்கும்.

இவ்வாறு இந்த கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சின் மீது ஒட்டுண்ணிகள் போன்று காலாகாலமாக ஒட்டியிருந்து தமது கட்சி உறுப்பினர்களுக்கு தேசிய பட்டியல்களையும் அபிவிருத்திதலைவர் பதவிகளையும் பெற்றுகொடுத்து தமது கட்சி இருப்பை பாதுக்காத்து கொண்டு வருகின்றன.

மறுபக்கம் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் அவரின் சொந்த தொகுதிக்கான கட்சி அமைப்பாளர் பதவி கூட இல்லாமல் காணப்படுகிறார்.இந்நிலை தொடருமாயின் திருகோணமலையிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி முகவரி அற்றுபோவது மட்டும் உறுதி.

2 comments:

  1. இப்படி வயிற்று பிழைப்பிற்காக இஸ்லாமிய அரசியல்வாதிகள் முஸ்லிம் அரசியல் கட்சிகளை சார்ந்து செல்வதால் தான் இன்று பேரினவாதம் அனைத்தையும் சிந்திக்க தொடங்கிவிட்டது. முஸ்லிம் பெயர்களை கொண்ட கட்சிகள் இந்த சமுதாயதிற்காக கிழித்தது தான் என்ன?

    ReplyDelete
  2. Kinniyan உங்களுக்கு வேற வேல இல்லேயா நிவர்த்தி செய்யப்படாத எவ்வளவு குறைபாடுகள் இருக்கிறது. ஒரு அணுவளவும் பிரயோசனம் மக்களுக்கு பிரயோசனம் இல்லாதததை எழுதியுள்ளீர்கள். if you want to advertise your Mr................., please post the article in your name, don't post as kinnian

    ReplyDelete

Powered by Blogger.