பிரிட்டன் நீதிமன்றங்களில் பெண்களுக்கு முகத்திரை: நீதிபதி விமர்சனம்
பிரிட்டன் நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்கும் பெண்கள் முகத்திரை அணிய அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அந்த நாட்டின் தலைமை நீதிபதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத் தலைவர் லார்டு நூபெர்கர் "தி டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
குற்றவியல் வழக்குகளில் பெண்கள் முகத்திரை அணிந்து சாட்சி கூறுவது நீதிபதிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
சாட்சியத்தின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டுமென்றால், அந்த சாட்சி முகத்திரை இல்லாமல் பேச வேண்டும்.
நீதிமன்றங்களில், நீதிபதிகளுக்கு அறிமுகம் இல்லாத மதங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளில் பங்கேற்கும் நிலையில், அவர்களது மத உணர்வுகளுக்கு நீதிபதிகள் மதிப்பளிக்க வேண்டும் என்று முன்பு கூறியிருந்தேன்.
அதற்காக, பெண்கள் முகத்திரை அணிந்து சாட்சி சொல்வதை நான் ஏற்கவில்லை என்றார் அவர்.
முன்னதாக பள்ளிகளில் மாணவிகளோ, ஆசிரியைகளோ முகத்திரை அணியும்போது, அந்த முகத்திரையால் தகவல் பரிமாற்றத்துக்கும், கல்வி கற்பதற்கும் இடையூறு ஏற்பட அனுமதிக்கப்பட மாட்டாது என பிரிட்டன் கல்வித்துறை ஆய்வாளர் மைக்கேல் வில்ஷா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Simply stupidity. Lives on benefit , wants British passport but don't wanna follow a simple rule.
ReplyDeleteEven a child will say without seeing the face how will I know who you are.
When they go to hajj / umrah they have to take the niqab off the at the airport. How on earth they do that in Saudi yet don't wanna do it in England. Stupid mindset making every Muslims life miserable. Now what will happen they won't even allow to wear the hijab let alone the niqab. Are they going to refuse taking photos for passport ?
The related Muslims must be accept this fact.They must try to understand the Islam clearly
ReplyDeleteஒருவரை இலகுவாக அடையாளம் காண்பதற்கு குறைந்தபட்சம் முகத்தையாவது விட்டு வைக்க வேண்டும்.
ReplyDeleteதலைமறைவாய்த் திரியும் நபர்களும் கொள்ளையர்களும்தான் முகத்தை மூடுவது வழமை.