"இரகசிய சந்திப்பு" குடும்பத்திற்கு தொல்லை என்றார் நாமல், இணைந்து செயற்பட அழைத்தார் மைத்திரி
-gtn-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அசௌகரியங்களை ஏற்படுத்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த வாரம் இடம் பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவமானது என்றும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தனது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வகையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் ஐந்தாறு விசாரணைகளை எதிர்கொண்டு விட்டதாகவும் நாமல் ரரஜபக்ச மைத்திரிக்கு கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தம்முடன் இணைந்து செயற்பாடுமாறு இதன்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாமலிடம் கேட்டுக்கொண்டதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் மேலும் கூறுகின்றது.
Yes call them all they will teach you how to make family members as rich as much...you all are same....shame on you!!!
ReplyDeleteWhy doesn't the YAHA PALANAYA bring the culprits of the former regime to justice? The investigations are just to cheat the people!
ReplyDeleteHoo......Hoo.....Yaha Palanaya.........My3 becomes a real joker.
ReplyDeleteHoo......Hoo.....Yaha Palanaya.........My3 becomes a real joker.
ReplyDelete