உயிர் அச்சுறுத்தல் மிக்க, உலகத் தலைவர்களில் மைத்திரி முதன் நிலை..!
-நஜீப் பின் கபூர்-
இந்த நாட்டில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அதிகாரத்துக்கு வந்து (08.01.2016) ஒரு வருடம் நிறைவடைகின்ற இந்த நேரத்தில் இந்தக் கட்டுரையாளனின் ஆய்வுகள், அவதானங்களின் படி உலகத் தலைவர்களில் மிகவும் உயிர் அச்சுறுத்தல் மிக்க 10 தலைவர்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரி முதல் நிலையில் இருக்கின்றார்.
இங்கு நாம் குறிப்பிடுகின்ற அச்சுறுத்தல்களை எதிர் நோக்குகின்ற தலைவர்கள் உள்நாட்டுஇபிராந்தியஇ சர்வதேச ஆதிக்கம் மற்றும் சில தனிப்பட்ட அல்லது சமூக நலன்கள்-பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தமே இந்த அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி இருக்கின்றார்கள்.
இப்போது சமகாலத்தில் உலகில் உயிர் அச்சுறுத்தல் மிக்க அந்தப் தலைவர்கள் 10பேர் யார் என்றும்இ அதற்கான நியாயங்கள் என்ன என்றும் பார்ப்போம்.
01.இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன. 02.ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி 03.எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா எல் சிசி 04.வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 05.சிரிய ஜனாதிபதி ஆபிஸ் அல் ஆசாத் 06.சோமாலிய ஜனாதிபதி ஹசன் செய்த் முஹம்மட் 07.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 08.சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் 09.துருக்கிய ஜனாதிபதி தைப் எர்டேகன் 10.சவூதி மன்னர் சல்மான்
ஆகியோர் கட்டுரையாளனின் சர்வதேசப் பார்வையின் படி முதன் நிலையில் இருந்து வருகின்றார்கள். இலங்கை ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்கள் நிறையவே இருந்து வருகின்றது என்பது தற்போது பல தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றது. உள் நாட்டுக் காரணங்களுக்காகவே இலங்கை ஜனாதிபதி மைத்திரி உயிர் ஆபத்துக்களை எதிர் நேக்கி வருகின்றார்.
2015 ஜனவரி 08ம் திகதி நாட்டில் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின் காரணமாக தமது சுகபோகங்களை இழந்த செல்வாக்கான நபர்களும் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த சிலரது நலன்கள் மைத்திரி வருகையால் பாதிக்கப்பட்டிருப்பதற்குப் புறம்பாக கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள்இ கொள்ளைஇ கொலைகள் தொடர்ப்பில் மைத்திரி கடும் போக்கில் நகர்வுகளை முன்னெடுக்க முயல்வதும்இ இதனால் குற்றவாளிகள் அடையளம் காணப்பட்டு தண்டனைகளை எதிர் நோக்கலாம் என்று அஞ்சுவது பிரதான காரணமாக இருப்பதுடன்இ மைத்ரியை ஒழித்துக் கட்டினால் தற்போது நாட்டில் இருக்கின்ற ஐ.தேக.-சு.கட்சி அரசியல் கூட்டு சின்னாபின்னமாகிவிடும். அதற்குப் பின்னர் ரணிலுக்கு இந்த அரசாங்கத்தை எந்த வகையிலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.
இன்று தேசிய அரசில் இருக்கின்ற சு.கட்சி அரசியல்வாதிகள் ஒரே இரவுக்குல் தமது நிலைப்பாட்டைமாற்றிக் கொள்ள நிறையவே வாய்ப்புக்கள் இருக்கினறது. இதனால் தனக்கு வேண்டிய வகையில் அரசை அமைப்பதுடன்இ அப்போது இந்தக் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் செல்லுபடியற்றதாகி விடும்! எனவே இந்தக் காரணங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிக்குள்ள பாதுகாப்பு!
இப்படி உள்நாட்டில் மைத்தரிக்கு நிறையவே அச்சுறுத்தல்கள் இருந்து வந்தாலும் ஏற்கெனவே போர்காலக் குற்றங்களுக்கு இலக்காகி இருப்பவர்கள் மைத்தரி மீது தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சற்று தயக்கம் காட்டி வருகின்றார்கள்.
இந்தியஇ மேற்கத்திய நாடுகள் சர்வதேச சமூகம் மைத்திரிக்கு ஏதும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற ஒரு அச்சம் இருந்து வருவது, மைத்திரிக்கு ஒரு சிறிய பாதுகாப்பு என்பது கட்டுரையாளன் கருத்து. இது தவிர உள்நாட்டில் மிகவும் உயிர் அச்சுறுத்தலை எதிர் நேக்கி இருக்கின்ற அரசியல்வாதியாக அமைச்சர் ராஜித சேனரத்ன இருந்து வருகின்றார்.
எனவே மைத்திரிக்குள்ள ஆபத்து முற்றிலும் உள் நாட்டு அரசியல் பின்னணி அடிப்டையில் உள்ள காரணங்கள்தான்.
இங்கு நாம் குறிப்பிடுகின்ற முஸ்லிம் நாடுகளில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் எதிர் நோக்கின்ற அச்சுறுத்தலகளுக்கு அனேகமாக இஸ்ரேல்- சியோனிச நலன்கள் அடிப்டையாகக் கொண்ட நிகழ்ச்சி நிரலே என்பது கட்டுரையாளன் கருத்து.
இந்தப் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருக்கின்ற ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி அங்கு நிலவுகின்ற உள்நாட்டு அரசியல் ஆயுதக்குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி வருகின்றார்.
எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா எல் சிசி அந் நாட்டு மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது ஆட்சியைக் கைப்பற்றி அதன் மூலம் இஸ்ரேல் -அமெரிக்க ஆதரவுப் போக்கை பின்பற்றிஇ அங்குள்ள செல்வாக்கான இஸ்லாமிய அரசியல் இயக்கங்களை அடக்கி வருவதால் அவர்களிடத்திலிருந்து பெரும் உயிர் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கி வருகின்றார். முன்னாள் எகிப்திய அதிபர் அன்வர் சதாத் தேசிய விழா வொன்றில் போது இராணுவ வீரர்களின் பணியில் வாகனங்களில் வந்தர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்களதேச பிரதமர் ஷேக் ஹசீனாஇ கடந்த சில காலங்களுக்கு முன்னர் தனது அரசியல் எதிரிகளைப் போர்காலக்குற்றச் செயல்களைக் காரணம் காட்டி தூக்கு மேடைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருப்தால் அந்தக் குழுக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி வருகின்றார். சோமாலிய ஜனாதிபதி ஹசன் செய்த் முஹம்மட் அங்கு நெடுநாளாக இருந்து வரும் போரட்டக் குழுக்களினால் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி இருக்கின்றார்.
சிரிய ஜனாதிபதி ஆபிஸ் அல் ஆசாதை ஒழித்துக்கட்டுகின்ற விடயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் முனைப்புடன் இருந்து வருகின்றது. இஸ்ரேல் அமெரிக்கா சவுதி ஆதரவுக் குழுக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இதில் முன்னணியில் இருக்கின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடயத்தில் ஒரு ஆபத்தை உண்டு பண்ணி இந்தியாவில் வரலற்றில் மிகப் பெரிய வன்முறை ஒன்று ஏற்படுத்தி இந்துக்களையும் முஸ்லிம்களையும் இரத்த வெள்ளத்தில் குளிக்க வைக்கும்திட்டம்இ இது முற்றிலும் சியோனிச ஏற்பாடு என்றாலும் அதற்கான உரிமையை கோறுவதற்கும் மூலசை;சலவை செய்யப்பட்ட முஸ்லிம்களை வைத்தது இந்த ஏற்பாடுகளைச் செய்ய வாய்ப்புக்கள் உண்டு.
சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மீது இருக்கின்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் அவரை வளைத்துப்பிடிப்பதில் இருக்கின்ற இயலாமை-அதனால் ஏற்பட்டுள்ள தாழ்வுச்சிக்கள் காரணமாக சிஐஏ இந்த முயற்சியில் இறங்க வாய்பிருக்கின்றது.
துருக்கி ஜனாதிபதி தைப் எர்டேகன் சவூதி மன்னர் சல்மான் இவர்களில் எவரையாவது இலக்கு வைத்து அதனை ஷீயாக்களின் வேலையாக அடையாளப்படுத்தி உலகம் பூராவிலும் சுன்னி-ஷீயா போரை ஏற்படுத்துவது இஸ்ரேலின் பிரதான இலக்கு. இன்று முஸ்லிம் நாடுகளை சுன்னி-ஷீயா என்று வேறுபத்தி அவர்களுக்கிடையில் மிகப் பெரிய வைராக்கியத்தை உண்டு பண்ணுவதில் வரலாற்றில் என்று மில்லாத வெற்றியை சியோனிசுகள் இன்று அடைந்து இருக்கின்றார்கள்.
இன்று முஸ்லிம் நாடுகள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற ஷீயா-சுன்னி மோதல்கள் யூதர்களுக்கு நல்ல பாதுகாப்பைக் கொடுத்திருக்கின்றது. ஷீயாக்களுக்கு குறிப்பாக இராணுவ ரீதியில் பிராந்தியத்தில் வல்லாதிக்கத்தைப் பெற முனையும் ஈரானை அரபு நாடுகளைக் கொண்டு ஈராக் பாணியில் தாக்கி அழிப்பதும் இதன் மூலம் பிராந்தியத்தில் தனக்கு முஸ்லிம் நாடுகளினால் இருந்து வருகின்ற ஆபத்தை வேறு திசையில் திருப்பி யூதர்களுக்கு பிராந்தியத்தில் வலுவான நெடுங்காலப் பாதுகாப்பொன்றை ஏற்படுhத்துவதில் பல தசாப்த்தங்களாக இஸ்ரேல் முனைந்திருப்பதுடன் அதில் கனிசமான வெற்றிகளை யும் பெற்றிருக்கின்றது.இதற்கு ஏற்றவாறு ஊடகங்களை சியோனிசுகள் நல்ல முறையில் நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவேதான் துருக்கி ஜனாதிபதி தைப் எர்டேகன் சவூதி மன்னர் சல்மான் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. சவுதியைப் பொறுத்தவரை ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இரகசிய இராணுவக் கூட்டை ஏற்படுத்தி இருக்கின்றது.எகிப்திலும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை அடக்குவதற்கு இஸ்ரேல்-அமெரிக்க உதவி நாடப்பட்டது. துருக்கி ஜனாதிபதி தைப் எர்டேகன் அந்த நாட்டை தனது தனிப்பட்ட இஸ்லாமிய சிந்தனைகள் காரணமாக செல்வாக்கான நாடாகக் கட்டியெழுப்பி வருவதானால் என்றாவது ஒருநாள் இந்தத் துருக்கி தனக்கு ஆபத்தாக அமையும் என்பதால் அவரை இல்லாமல் செய்வது இஸ்ரேல் நலன்கள் சம்பந்தப்பட்ட விவகாரமாக பார்க்கப்படுகின்றது.
இன்று தனது இந்த நோக்கங்களை அடைந்து கொள்ள முஸ்லிம்களையே மூளைச்சலவை செய்தும் பணத்துக்கு விலைக்கு வாங்கியும் வருகின்றது. உலகலவிய ரீதியில் உள்ள யூத செல்வந்தவர்கள் முஸ்லிம்களை முஸ்லிம்களைச் கொண்டு அழிக்கும் இஸ்ரேல் திட்டத்திற்குத் தமது பெருளாதரார உதவிகளை அள்ளி; வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் பக்காதி ஒரு யூதன் என்பதும் முன்பு ஒரு நடிகனாக இருந்தவர் என்பதுடன் அண்மையில் மிகச் செல்வாக்கான ஒரு இஸ்ரேல் இராணுவ ஜெனரல் ஐ.எஸ்.ஐ.எஸ்.சுடன் இணைந்து ஈராக்கில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது பிடிபட்டது இந்த அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்துகின்றது. எனவேதான் முக்கிய சுன்னித் தலைவர் ஒரு வரை படுகொலை செய்து பிராந்தியத்தில் சுன்னி-ஷீயா போரை நேரடியாக மிக விரைவில் ஏற்படுத்துவது அவர்களது நோக்கம்.
தற்போதய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அரசியல் செல்வாக்குப் பெற்று ஜனாதிபதியாக வர இருக்கின்ற நேரத்தில் கூட சியோனிட்டுக்கள் ஒபாமாவைச் சுட்டுக் கொல்ல வேண்டியது யூதர்களின் மத இன ரீதியான கடமை என்று பகிரங்கமாக பேசி வந்ததும். அவரைத் தோற்கடிக்க பல கோடி டொலர்களைச் செலவு செய்ததும் சர்வதேச அரசியல் விவகாரங்களை ஞாபகத்தில் வைத்திருப்பவர்களுக்கு நினைவிருக்கலாம்.
பழிவாங்கும் என்னங்கொன்டவர்கலுக்கு அந்த பழியை போடுவதற்கு தற்போது நமது நாட்டில் பெரு இயக்கங்கள் பயங்கரவாத சாயம் இல்லையென்பதால்தான் தூக்கமின்ரிசிலர் தவித்துக்கொன்டிருக்கார்கள்
ReplyDeleteஒருவேளை மைத்திரியின் உயிர் பறிக்கப்பட்டாலும் கூட அதனை திட்டமிட்டவர்களால் அதிகாரத்திற்கு வந்து நிம்மதியாக காலம் தள்ள முடியாது.
ReplyDeleteகாரணம் : மைத்திரியின் வருகையானது சர்வதேச அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக சாகசம். அது அத்தனை சுலபமாக அஸ்தமிப்பதை அனுமதிக்கும் சர்வதேசத் தேவை இன்னும் ஏற்படவில்லை