Header Ads



சட்டவிரோத இஸ்ரேலுடன், விமான சேவையை தொடங்கும் இலங்கை..?

சட்டவிரோத இஸ்ரேலுடன், விமான சேவையை தொடங்குவதற்கு இலங்கை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய காலங்களில் இஸ்ரேலிய அதிகாரிகளின் இலங்கைக்கான விஜயங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது இருநாடுகளுக்கும் இடையே விமான சேவையும் ஆரம்பிக்கப்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கத் தலைவரும் ஐ.தே.க மத்திய குழு உறுப்பினருமாகிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 

இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையில் விமான சேவையொன்று ஆரம்பிக்கப்படுமாக இருந்தால், அது மிகவும் துரதிஷ்டமான செயல். உலகில் இன்று ஐரோப்பிய நாடுகளில் கூட அங்குள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள பேராசிரியர்கள் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களிலுடனான தொடர்புகளை துண்டித்து வருகிறார்கள். அங்கிருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதனையும் நிறுத்தி வருகிறார்கள்.

இன்று புத்திஜீவிகள் விழிப்போடு உள்ளனர். இது யூதர்களுக்கெதிரான செயற்பாடல்ல, சியோனிச வேலைத் திட்டங்களுக்கெதிரான செயற்பாடுகளாகும். காஸா பள்ளத்தாக்கு இன்று வெட்டவெளிச் சிறைச்சாலையாக மாறியுள்ளது. அங்கு மனிதர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள்.

ஐ.நா. சபையில் 60 வீதம் இது பிழையென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டு அத்தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகின்றன. உலகில் மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்ற வல்லரசு நாடுகள் செயலில் அதை காண்பிப்பதில்லை. உலக மக்கள் கருத்துக்கு தலை சாய்க்காமல் புரியும் செயல்களுக்கு மத்தியில் நாம் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டு அவர்களுடன் வேறுபல சேவைகளை முன்னெடுக்கும் போது அது ஜனநாயக விரோதச் செயலாகிறது.

இவ்வேளையில் நாம் அவர்களின் வரவேற்பைத் தடுத்து ஐ.நா. வின் தீர் மானங்களுக்கு தலைசாய்க்குமாறு அறிவுரை கூற வேண்டும்.

இன்று ஒஸ்லோ உடன்படிக்கை, மிசல் உடன்பாடு இவை யெல்லாவற்றையும் இஸ்ரேல் மீறியுள்ளது. இத்தகையதொரு நிலையில் அவர்களை வரவேற்பதென்பது ஜனநாயக பூர்வமான விடயமொன்றல்ல. அது இந்நாட்டு மக்களின் அபிமானத்திற்கு இழைக்கப்படுகின்ற அவமானம்.

No comments

Powered by Blogger.